பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

இண்டெக்ஸ்

கடந்த வாரம் வாங்கலாம், விற்கலாம் பகுதியில், இந்திய சந்தையில்  ஏற்றம் தொடர்ந்தால், நிஃப்டி 8335 புள்ளிகளுக்கும், பேங்க் நிஃப்டி 18050 புள்ளிகள் வரையும் அதிகரிக்கும் என்று சொல்லி இருந்தோம்.  முடிந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தில் கூறி இருந்த புள்ளிகளுக்கு அருகாமையில் வர்த்தகம் நடைபெற்றது. குறிப்பாக, ஜூன் 7 செவ்வாய்க்கிழமை நிஃப்டி 8318 புள்ளிகளையும், 10-ம் தேதி வெள்ளிக்கிழமை பேங்க் நிஃப்டி 18026 புள்ளிகளையும் தொட்டு வர்த்தகமானது  குறிப்பிடத்தக்கது.

ஆக ஏறக்குறைய, கடந்த வாரத்தில் சொல்லப்பட்டிருந்த இலக்கு விலைகளை சந்தை அடைந்துவிட்டது என்றே எடுத்துக்கொள்ளலாம். எனவே, தற்போது சந்தை புல்பேக் என்றழைக்கப்படும் இறக்கங்களை எதிர்பார்க்கலாம். தற்போது சந்தை இருக்கும் நிலையில், எடுக்கும் ரிஸ்க்குக்கு தகுந்தாற்போல வருமானம் கிடைக்காது என்பதால், பலரும் புதிதாக பொசிஷன்களை எடுக்கத் தயாராக இல்லை.

கடந்த வாரத்தில் காளை வர்த்தகர்கள் தான் சந்தையை ஏற்ற வேண்டும் என்று சொல்லி இருந்தோம், ஆனால், இப்போது வரும் வாரத்தில் காளை வர்த்தகர்கள் சந்தையில் வியாபாரத்தை மேற்கொள்ளாமல் ஒதுங்கி இருக்க முடிவு செய்திருப்பது போன்றே தெரிகிறது. 
வர்த்தக ரேஞ்சுகள் குறைவான இடைவெளியோடு இருந்ததால் பங்குகள் விற்பதும் அதிகளவில் நடைபெறவில்லை.

காளை வர்த்தகர்கள், சந்தையை உயர்த்த கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாமல் இருக்கிறார்கள் என்றால், அது சந்தையின் போக்கில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். எனவே, இன்னும் ஒரு வார காலத்துக்கு காளை வர்த்தகர்கள் சந்தையை உயர்த்துகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதே நேரத்தில் சில நெகட்டிவ் செய்திகள் வந்தால் சந்தை இறக்கத்தை காண்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, அடுத்த வாரத்தில் ஜாக்கிரதை யாக, ஸ்டாப்லாஸ் வைத்து வர்த்தகத்தை மேற்கொள்ளவும்.

நிஃப்டி ஃப்யூச்சர்களுக்கு 8090 என்கிற புள்ளியை இலக்காக எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை சந்தை நெகட்டிவ்வான செய்திகளால் இறங்கினால் 8020 என்கிற புள்ளிகள் வரை கூட இறக்கம் காணலாம். அதே போல், பேங்க் நிஃப்டி 17350 என்கிற புள்ளிகள் வரை இறக்கம் காணலாம்.
தற்போதைய சந்தை விலைகளை விட கொடுக்கப்பட்டிருக்கும் இலக்கு விலைகள் நல்ல இடைவெளியோடு இருப்பதால், அடுத்த வாரத்தில் வர்த்தகர்கள்  ஷார்ட் எடுக்கலாம்.  நிஃப்டி 8295 புள்ளிகளை உடைத்துக்கொண்டு அதிகரிக்கும்போது மட்டுமே, லாங் பொசிஷன்கள் எடுக்கலாம்.

1. ஸ்பைஸ் ஜெட் (BSE Code: 500285)

தற்போதைய விலை : ரூ. 63.75


இந்தப் பங்கின் விலை கடந்த மே 20-ல் ஒரு புதிய ஏற்றத்தை கண்ட பின் சற்று இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகிறது. தற்போது விமானச் சேவையில் கட்டண உச்ச வரம்பை நீக்கிய பின், பல புதிய வர்த்தகர்கள் இந்தப் பங்கில் வர்த்தகம் மேற்கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். எனவே, இந்தப் பங்கின் விலை 73 - 75 ரூபாய் வரை அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்பிருக்கிறது. இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்