நிஃப்டி எதிர்பார்ப்புகள்: செய்திகள் நெகட்டிவ்வாக இருந்தால் திடீர் இறக்கங்களைச் சந்தித்து திரும்பலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்செய்திகள் நெகட்டிவ்வாக இருந்தால் திடீர் இறக்கங்களைச் சந்தித்து திரும்பலாம்!

ட்டிவிகித முடிவுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்றும் டெக்னிக்கலாக இன்னமும் 80 முதல் 100 புள்ளிகள் வரையிலான ஏற்றமே சாத்தியம் எனும் சூழலில் சந்தை இருக்கிறது என்றும் செய்திகள் பாசிட்டிவ்வாக இருந்து வால்யூமுடன் 8300 லெவல்களை தாண்டும் பட்சத்தில் 8523 வரையிலும் சென்று திரும்பக்கூடிய திறன் சந்தைக்கு கிடைக்கலாம்;

செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் மீது கவனம் வைத்தே வியாபாரம் செய்யவேண்டியிருக்கும் என்றும் சொல்லியிருந்தோம்.

வாரத்தின் மூன்று நாட்களில் இறக்கத்திலும் இரண்டு நாட்கள் ஏற்றத்திலும் முடிவடைந்த நிஃப்டி வாரத்தின் இடையே 8294 என்ற அதிகபட்ச லெவலையும், 8162 என்ற குறைந்தபட்ச லெவலை அடைந்து வார இறுதியில் வாராந்திர ரீதியாக ஐம்பது புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது. வரும் வாரத்தில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகளும், பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் வட்டி விகித முடிவுகளும் வெளிவர இருக்கின்றன. அமெரிக்க வட்டி விகித முடிவுகள் எதிர்பார்த்த மாதிரி இருந்தால் சந்தை மீண்டும் மேல் நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது. அப்படி இல்லாத பட்சத்தில் 7977 லெவல்கள் வரை உடனடியாக இறங்கி பின்னர் வேகமான ஏற்றத்தை சந்திக்க வாய்ப்புள்ளது என்பதை நினைவில் வைத்தே டிரேடர்கள் வியாபாரம் செய்யவேண்டியிருக்கும்.

செய்திகள் நெகட்டிவ்வாக இருந்தால் வேகமான இறக்கம் வந்துவிடும் வாய்ப்பு இருப்பதால் செய்திகளின் மீது கவனம் வைத்து வியாபாரம் செய்யுங்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் நல்ல ஃபண்டமென்டல்கள் இருக்கும் ஸ்டாக்குகளில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் லாங் சைட் வியாபாரம் செய்வதற்காக மட்டுமே சந்தையை டிரேடர்கள் ட்ராக் செய்யலாம். வாரத்தின் அனைத்து நாட்களிலுமே கேப் ஓபனிங் வந்தால் சந்தை செட்டிலாகும் வரை காத்திருந்து வியாபாரம் செய்யவேண்டும். அதேபோல் கடைசி அரை மணி நேரத்துக்கு முன்னரே டிரேடிங்கை முடித்துக்கொள்வதே சிறந்த ஸ்ட்ராட்டஜியாக இருக்கும். ஓவர் நைட் பொசிஷன்களை கட்டாயம் தவிர்க்கவேண்டிய தருணம் இது.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்