டிரேடர்களே உஷார் - 11

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.ஒரு வார்த்தை... ஒரு லட்சம்!

கேந்திரன் ஒரு மத்திய அரசு ஊழியர். புறநகரில் சொந்த வீடு, குழந்தை குட்டிகள் என அழகான  வாழ்க்கை அவருடையது. காலையில் ஆபிஸ் போவார், மாலையில் திரும்பி வருவார். குழந்தைகளுடன் விளையாடுவார். வாழ்க்கை ரம்மியமாக போய்க்கொண்டு இருந்தது.

மகேந்திரனுக்கு இருக்கும் ஒரே நண்பர், பக்கத்து சீட் ஈஸ்வரன்.  சில தினங்களாக செல்போன் அடித்தால், என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் சரி,  அதை அப்படியே போட்டுவிட்டு போனை எடுத்துக்கொண்டு  வெளியே போய்விடுவார். அவர் திரும்பி வரும்போது, சில நாள் சந்தோஷமாக வருவார். சில நாள் முகத்தில் ஒரு வேதனை தெரியும்.

மகேந்திரன் இதைத் தொடர்ந்து கவனித்து வந்தார். உள்ளுக்குள் அந்தக் கேள்வி குறுகுறு என்று ஓடிக்கொண்டு இருந்தது. மதிய உணவின்போது ஈஸ்வரனிடம் கேட்டே விட்டார்.

‘‘என்ன ஈஸ்வர்... அப்பப்ப, போன் வந்தா பரபரப்பா ஆயிடுறீங்க. என்ன விஷயம், ஏதாவது பிரச்னையா?’’ என்று கேட்டார் மகேந்திரன்.

“பிரச்னை எல்லாம் இல்லை. கொஞ்ச நாளா நான் ஷேர் டிரேடிங்கல இறங்கி இருக்கேன். எங்க தூரத்து சொந்தக்காரப் பையன் முகுந்தன்னு ஒருத்தன் புரோக்கர் ஆபிஸ்ல வேலை பார்க்கிறான். ‘நீங்க ஒரு கணக்கு ஆரம்பிங்க மாமா,  நான் உங்களுக்கு தேவையான உதவி பண்றேன்னு’ சொன்னான். அதான் நானும் இப்ப டிரேட் பண்றேன்.”

‘ஓ, அப்படியா’ என்று  சொன்ன மகேந்திரன்  பிற்பாடு அதை மறந்தேவிட்டார்.

அடுத்தடுத்து சில தினங்களும் இதே மாதிரி நடக்க, மகேந்திரனுக்கும் அந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது. மனுஷன் இப்படி பரபரன்னு  இருக்காரே! நாமும் ஏன் செய்யக் கூடாது என்று அவர் மனதில் ஒரு ஆசை வந்தது. ஈஸ்வரனிடம் மெல்ல கேட்டுப் பார்த்தார். அவர் சொன்ன ஆலோசனைப்படி, ஆபிஸுக்கு அரை நாள் லீவு போட்டுவிட்டு,  முகுந்தனைப் பார்க்கப் போனார் மகேந்திரன். 

“நல்ல முடிவு சார். நான் கட்டாயமா ஹெல்ப் பண்றேன். முதல்ல நீங்க எங்கிட்ட அக்கவுன்ட் ஓப்பன் பண்ணனும். அப்புறம், நீங்க எவ்வளவு பணம் போடலாம்னு இருக்கீங்க?” என்று கேட்டார் முகுந்தன்.

“15,000 ரூபா...”

“இந்தப் பணத்தை வெச்சு நீங்க பெருசா பணம் பண்ண முடியாது. இருந்தாலும் முதல் முறையா செய்யப் போறீங்க. ஓ.கே. ஆரம்பிங்க!” என்று ஆசிர்வாதம் தந்தார் முகுந்தன்.

மகேந்திரன்,  மளமளவென்று அக்கவுன்ட் துவங்கினார். அதன் பின், ரூ.15,000 செக்கை எடுத்துகிட்டு முகுந்தனை பார்க்கப் போனார். மகேந்திரனுக்கு உள்ளுக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடியது.

“முகுந்தன், இப்ப நான் பணம் போட்டுட்டேன். அப்புறம் எப்படி டிரேட் பண்றது?” என்று கேட்டார் மகேந்திரன்.

‘‘தினம் எங்க ஹெட் ஆபிஸில் இருந்து நிறைய டிப்ஸ் தருவாங்க.  எனக்கு டிப்ஸ் வரும் போதெல்லாம், உங்களுக்கு போன் பண்ணி சொல்றேன். நீங்கள் வாங்கலாம்னு சொன்னீங்கன்னா, நான் உங்க அக்கவுன்ட்ல வாங்கறேன்.”
 
மகேந்திரனுக்கு உள்ளுக்குள் ஒரு சந்தேகம் ஓடியது. ஒரு வேளை நம் கணக்கில் இவர் ஏதாவது நாம் சொல்லாமல் வாங்கி ஏடாகூடம் பண்ணி விட்டால்!  இதை எப்படி கேட்பது?  இருந்தாலும் கேட்டுத் தானே ஆகணும்.

“முகுந்தன், நான் ஒண்ணு கேட்பேன் நீங்க தப்பா நினைச்சிக்கக் கூடாது? என்னோட அக்கவுன்ட்ல, என்னை கேட்காமல் ஏதாவது ஆர்டர் போட்டுடீங்கனா?”

முகுந்தன் கலகலவென்று சிரித்தார். “என்ன சார், இதுக்கா இவ்வளவு தயங்கினீங்க.  எங்க ஆபிஸில, எல்லாமே சிஸ்டமேட்டிக்தான். நான் உங்களுக்கு போன் பண்ணி வாங்கலாமான்னு கேட்கறதும், அதுக்கு நீங்க வாங்கலாம்னு சொல்ற பதிலும் ரெக்கார்டு ஆயிடும்’’.

இதைக் கேட்டதும் மகேந்தரனுக்கு நம்பிக்கை வந்தது. அடுத்த நாளில் இருந்து, ஈஸ்வரனுக்கு போன் வருவது போல்,  மகேந்திரனுக்கும் போன் வர ஆரம்பித்தது. 

போனில் முகுந்தன், “சார்,  டாடா மோட்டார்ஸ் கால் சார்.  410-ல வாங்கலாம், ஸ்டாப்லாஸ் 405, டார்கெட் 420.”

“அப்படியா...  ஒரு 10 ஷேர் வாங்குங்க.”

முகுந்தனுக்கு சப்பென்று ஆனாது.  “சார், 100 ஷேராவது வாங்குங்க சார்.”

“பரவாயில்லை முகுந்தன் இப்ப 10 போதும்.”

“சரி சார் வாங்கியாச்சு.”

கொஞ்ச நேரம் கழித்து முகுந்தனிடம் இருந்து போன். “சார், டாட்டா மோட்டார்ஸ் 420 போயிடுச்சு.  உங்களுக்கு ரூ.100 லாபம். சார், நீங்க 100 ஷேர் வாங்கி இருந்தீங்கனா, இப்போ உங்களுக்கு ரூ.1,000 கிடைத்திருக்கும்.”

மகேந்திரனுக்கு உள்ளுக்குள் ஒரு சந்தோஷம் பரவியது. முகுந்தன் மீதும் ஒரு நம்பிக்கை வர ஆரம்பித்தது. சரியான நேரத்தில கால் பண்ணி வாங்குறார்.  அப்புறம் சரியான நேரத்தில கால் பண்ணி விக்கிறார்.

“சரி முகுந்தன், நீங்க அடுத்த முறை டிப்ஸ் வரும்போது சொல்லுங்க, அப்ப 100 ஷேரா வாங்கிடலாம்.”

மகேந்திரன் போனில் பேசும் வார்த்தைகள் படிப்படியாக குறைந்தது.  அடுத்த முறை முகுந்தனிடமிருந்து போன் வரும்போதெல்லாம், ‘‘சரி வாங்குங்க’’.  அப்புறம் போன் வந்தா, ‘‘வித்தாச்சா சரி.  அதன் பிறகு...” அவர் உபயோகிக்கும் வார்த்தை என்பது  சரி என்பதாக மட்டுமே இருந்தது. ஓரளவுக்கு  லாபம் வர ஆரம்பித்தது. மகேந்திரனுக்கு, முகுந்தன் மேல் நல்ல அபிப்ராயமும், நம்பிக்கையும் கூட ஆரம்பித்தது.

ஒரு நாள் மகேந்திரனுக்கு, முகுந்தனிடம் இருந்து கால். “சார், நான் ஒரு ஐடியா சொல்றேன்,  நீங்க கேஷ் மார்கெட்ல பண்றதுக்கு பதிலா ஏன் ஃப்யூச்சர்ஸ்ல பண்ணக் கூடாது?”

“ஃப்யூச்சர்ஸ்னா என்ன?”

“ஒண்ணும் இல்ல சார். இதே ஷேரே வாங்குவோம். ஆனா லாட் லாட்டா வாங்குவோம். ஒரு லாட்டுன்னா ஷேரு விலைக்கு ஏத்த மாதிரி 1,000, 1,500, 2,000 அப்படின்னு மாறும்.”

“ஐய்யய்யோ, அது பெரிய ரிஸ்க் ஆச்சே?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார். கேஷ் மார்க்கெட்ல ஒரு ஷேரை வாங்கி நாள் முழுவதும் வெயிட் பண்ணி 500 இல்ல 1,000 பாக்குறதுக்குப் பதிலா, இதில் டக்கு டக்குன்னு 1,000, 2,000,  3,000 -ன்னு எடுத்திடலாம். அதுக்கும் எங்க ஹெட் ஆபிசுல இருந்து டிப்ஸ் வரும்.”

“எனக்கு பயமாக இருக்கு முகுந்தன். இருந்தாலும் ஒண்ணு இரண்டு தடவை முயற்சிக்கலாம். நல்லா வந்த அப்புறம் தொடர்ந்து பண்ணலாம். ஆனா, ஒரே ஒரு லாட் வாங்கினா போதும்” என்றபடி, முகுந்தன் கேட்ட கூடுதல் தொகையான ரூ.50,000-த்தைத் தந்தார்.

 முகுந்தனிடம் இருந்து போன் வரும், மகேந்திரன் எடுத்து சரி என்பார்.   அப்படின்னா வாங்கலாம் என்று அர்த்தம். கொஞ்ச நேரம் கழிந்து போன் வரும் சரி என்பார்.  அதற்கு, விற்றாகிவிட்டது என்று அர்த்தம்.

முன்பு எல்லாம் தினம் 500, 1,000 என்று லாபம் பார்த்த மகேந்திரன் இப்போது தினம் 2,000, 3,000 லாபம் பார்க்க ஆரம்பித்தார். தினம் ஒரு லாட் வாங்குவார்; ஒரு லாட்டை விற்பார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்