நர்சரி கார்டன்... கவரும் அழகு... வளரும் வருமானம்!

லாபம் தரும் தொழில்கள்!த.சக்திவேல்

மக்கு ஏதாவது  பிரச்னை ஏற்பட்டு மனச்சோர்வாக இருக்கும்போது நாம் முதலில்  தேடிச் செல்கிற இடம் மரம், செடிகளுடன்  இருக்கும் பூங்காவாகத்தான் இருக்கும். பூங்காவில் இருக்கும் அழகழகான மலர்களை, செடி, கொடிகளைப் பார்க்கும்போது நம் மனதில்  இருக்கும் கவலைகளை மறந்து, நாம் புதிய உற்சாகமும் சுறுசுறுப்பும் பெறுவோம்.

இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்று நாம் மட்டுமல்ல, எல்லோருமே ஏங்கத்தான் செய்கிறோம். மன அமைதிக்காக பூங்காக்களைத் தேடிப் போவதைவிட, நம் வீட்டிலேயும் இதே மாதிரியான செடி, கொடிகளை வாங்கி வளர்க்க வேண்டும் என்ற ஆசை  நம் எல்லோர் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. நம் வீட்டில் வளர்க்கிற செடிகளுக்கு காலையிலும் மாலையிலும் தண்ணீர் விடும்போதும், புதிதாக மலரும் பூக்களைப் பார்க்கும்போதும் நாம்  அடைகிற சந்தோஷத்தில் கிடைக்கிற மன நிம்மதி வேறு எதிலும் கிடைப்பதில்லை.
 
இதனால்தான் இப்போதெல்லாம் புதிதாக வீட்டைக் கட்டும்போதே சிறிய அளவில் ஒரு பூந்தோட்டம்  ஒன்றை அமைக்க இடம் விட்டுத்தான் வீட்டைக் கட்டுகிறோம். ஏற்கெனவே  வீட்டைக் கட்டியவர்கள்கூட வீட்டுக்கு முன்னும், பின்னும் சிறிய இடத்தில் செடி, கொடிகளை வளர்க்கத் தொடங்கி இருப்பது ஆரோக்கியமான மாற்றமே. இன்னும் சிலர், வீட்டின் மொட்டை மாடியில் தோட்டம் அமைத்து வருகின்றனர். 

ஆக, வீட்டின் முன் அழகான  செடி கொடிகளை வளர்ப்பது ஒரு கலாசாரமாகவே  மாறி வருகிறது.  இதனால்  செடி, கொடிகளை விற்பனை செய்கிற நர்சரி கார்டன் தொழிலும் நன்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.

இன்றைக்கு நர்சரி கார்டன் தொழிலில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது, இதன் எதிர்காலம் எப்படியிருக்கும், இதிலுள்ள பிசினஸ் வாய்ப்புகள் என்னென்ன  என்பதைப் பற்றி சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காதம்பரி நர்சரியின் நிறுவனர்   வே.ராஜேந்திரனிடம் கேட்டோம்.  விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

“சாலைகள் அமைப்பதற்காக வும், நகரங்களை உருவாக்கவும் இருந்த மரங்களை எல்லாம் வெட்டிவிட்டோம். எங்கு பார்த்தாலும் குப்பை மேடுகள், பாலீதின் பைகளால்,  இன்றைக்குச்  சுற்றுச்சூழல் மிகுந்த அளவு பாதிப்படைந்து வருகிறது. அதே நேரத்தில்,  மக்கள் மத்தியிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வும் அதிகரித்து வருகிறது. வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்பதை தங்கள் கடமையாக மக்கள் நினைக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக் கவும், வீட்டை அழகாக வைத்துக் கொள்ளவும்  செடி, கொடிகளை வளர்க்கும் ஆர்வம் மக்களிடம் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. வீடு மற்றும் நிறுவனங்களில்  முக்கியமான இடத்தை செடி, கொடிகள் இன்றைக்குப் பிடித்திருக்கிறது.  அதனால்  இந்த செடி, கொடிகளுக்கான தேவை முன்பை விட இப்போது அதிகரித்து இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்