கமாடிட்டி டிரேடிங்

ஜெ.சரவணன்

ரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதைப் பற்றிய செய்தி கமாடிட்டி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், ரம்ஜான் விழாவையொட்டியும் கமாடிட்டி பொருட்களின் வர்த்தகம் தாக்கம் கண்டுள்ளது. இந்த வாரம் கமாடிட்டி பொருட்களின் வர்த்தக நிலவரங்களை தந்துள்ளனர் இந்தியா நிவேஷ் கமாடிட்டீஸ் இயக்குநர் மனோஜ் குமார் ஜெயின் மற்றும் கேடியா கமாடிட்டீஸ் நிறுவனத்தின் சென்னை பிராந்திய மேலாளர் கே.சரவணன். 

கச்சா எண்ணெய்!

கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய்யின் விலை சுமார் 5 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்தது. இதற்கு முக்கிய காரணம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என்ற அச்சம் நிலவி வந்ததுதான். இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் பொருளாதார மந்த நிலை ஏற்படக்கூடும் என்ற நிலை இருந்தது. அதே சமயம், டாலரின் மதிப்பும் இரண்டு வார உச்சத்தை வியாழன் அன்று எட்டியது. மேலும், ஈரான் தனது உற்பத்தியை அதிகப்படுத்தியதன் காரணத்தினா லும், சந்தையில் சப்ளை அதிகம் இருந்ததாலும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தது. இது வரும் வாரத்தில் 47 டாலருக்கு கீழ் நகருமானால், 44 டாலர் வரை செல்ல அதிக வாய்ப்புள்ளது. எனவே, விலை உயரும்போது முதலில் விற்றுவிட்டு, பிற்பாடு விலை குறைந்தபின் வாங்கி (sell on rise) நேர் செய்யும் வழிமுறையை பின்பற்றி வர்த்தகம் செய்யலாம். இந்தியச் சந்தையில் பேரல் கச்சா எண்ணெய் ரூ.3,320 என்ற நிலையில் விற்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.3,450. விலை இறக்கம் ரூ.2,980 வரை இருக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்