கருணையும் வேண்டும்; கண்டிப்பும் வேண்டும்!

ஹலோ வாசகர்களே..!

ந்தியாவில் வரி கட்டுகிறவர்களின் எண்ணிக்கையை 10 கோடியாக உயர்த்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி. வரித் துறையினர் மக்களிடம் கனிவுடன் நடந்துகொண்டால், இன்னும் நிறைய பேர் வரி கட்டுவார்கள் என்றும் சொல்லி இருக்கிறார் அவர். பிரதமரின் இந்தக் கருத்துக்கள் சரியானவை என்பதால் வரவேற்கத்தக்கவையே.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 125 கோடியாக இருந்தாலும் வருமான வரி செலுத்துகிறவர்களின் எண்ணிக்கை 5.43 கோடி மட்டுமே. ஆண்டு தோறும் வருமான வரி கட்டுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றாலும் நம் நாட்டில் பலரும் வரி கட்டுவதில்லை என்பதே உண்மை. இந்தியா முழுக்க இருக்கும் கோடிக்கணக்கான வியாபாரிகளில் பலரும் எந்த வரியையும் கட்டுவதில்லை. பெரிய அளவில் பிசினஸ் செய்துவரும் பிசினஸ்மேன்கள்கூட சரியாக வரி கட்டாமல் தப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையை மாற்ற வேண்டுமெனில், வரி செலுத்துவது தனது கடமை என்கிற எண்ணத்தை ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் மனதிலும் விதைக்க வேண்டும். வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது, வரி கட்டுவது போன்ற செயல்கள் எளிதாக இருக்கும்பட்சத்தில் பலரும் வரியைக் கட்டவே விரும்புவார்கள். ஆனால், இன்றைய தேதியில் வரி கட்டுவது ஒருவரது நிம்மதியைக் குலைக்கும் விஷயமாக இருப்பதால்தான், பலரும் வரியைக் கட்டாமலே விட்டுவிடுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்