பேங்க் அஷ்யூரன்ஸ்... பாலிசிதாரர்கள் உஷார்!

மு.சா.கெளதமன்

ந்தியாவில் இருக்கும் பொதுத்துறை வங்கிகள் ஒரு ஜெனரல் இன்ஷூரன்ஸ், ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ், ஒரு லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து பாலிசிகளை விற்கலாம் என்று இருந்த விதி தற்போது  வேறுவிதமாக மாற்றப்பட்டிருக்கிறது.

அதாவது, மூன்று ஜெனரல் இன்ஷூரன்ஸ், மூன்று ஹெல்த் இன்ஷூரன்ஸ், மூன்று லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களோடு இணைந்து இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விற்கலாம் என்று இந்திய இன்ஷூரன்ஸ் சந்தையை நெறிமுறைப்படுத்தும் ஐஆர்டிஏ (IRDA)  வங்கிகளுக்கு அனுமதி வழங்கி இருக்கிறது. இதனால் மக்களுக்கு  நன்மை கிடைக்குமா அல்லது தீமை விளையுமா என்பது முக்கியமான கேள்வியாக எழுந்திருக்கிறது.

பேங்க் அஷ்யூரன்ஸ்!

ஒரு வங்கி, ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து, அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசிகளை விற்றால் அதற்கு பெயர் பேங்க் அஷ்யூரன்ஸ்    (bancassurance) என்கிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிகள் பாலிசிகளை விற்றுக் கொடுப்பது முக்கிய வேலை. உதாரணமாக, பொதுத்துறை வங்கிகளான கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, பேங்க் ஆஃப் இந்தியா, ஆந்திரா பேங்க்  போன்ற வங்கிகள், அப்போலோ முனிச், ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், இசிஜிசி, எல்ஐசி, ஃப்யூச்சர் ஜெனரலி, ஸ்டார் யூனியன் டாயிஷ் போன்ற இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விநியோகித்து வருகின்றன.

இந்த பேங்க் அஷ்யூரன்ஸ் திட்டம் இந்தியாவில் 2000-வது ஆண்டில் அறிமுகப்படுத்தப் பட்டு, 2002-ல் ஐஆர்டிஏவால் ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஒரு வங்கியில் யார் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விற்பார்கள், அவர்களுக்கான தகுதிகள் என்ன, ஏன் வங்கிகள் மூலம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் விற்கப்படுகின்றன என்பதை பற்றி ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தமிழக பிராந்திய மேலாளர்   (Zonal Manager) சி.பாலாஜி பாபுவிடம் கேட்டோம்.

வங்கிகள் மூலம் இன்ஷூரன்ஸ் ஏன்?

‘‘இந்தியாவில் பொதுவாக பெரிய அளவில் மக்களுக்கு தொடர்பு இருக்கும் நிறுவனங்களில் வங்கிக்கு என்றுமே தனி இடம் உண்டு. இந்தியாவில் இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வங்கி மூலம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விற்றால், மக்களுக்கு இன்னும் கைக்கு எட்டும் தூரத்தில் இன்ஷூரன்ஸ் இருக்கும் என்பதால்தான் வங்கிகள் மூலம் பாலிசிகளை விற்று, இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறது. இதுதான் ஐஆர்டிஏ, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசின் எண்ணம். பாலிசி எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் இன்ஷூரன்ஸ் துறையே மொத்தமாக வளரும்.

குறிப்பிட்ட பிரீமியம் தொகை வசூலிக்கப்படும் ஏரியாவுக்கு (பல சிறிய ஏரியாக்களை உள்ளடக்கியது) இன்ஷூரன்ஸ் பற்றி நன்கு அறிந்த, இன்ஷூரன்ஸுக்காக பயிற்சி அளிக்கப்பட்டு ஒரு வங்கி அதிகாரி இருப்பார். ஐசி 32 (ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை மட்டும் விற்க), ஐசி 33 (லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை மட்டும் விற்க), ஐசி 34 (ஜெனரல் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை மட்டும் விற்க),       ஐசி 38 (அனைத்து வகையான இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் விற்க) என  தனித்தனியாக தேர்வுகள் இருக்கிறது. இவற்றுள் தேவையான தேர்வுகளை எழுதித் தேறிய அதிகாரிகள் வங்கிகளில் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விநியோகம் செய்பவராக இருப்பார். இந்த அதிகாரிக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தேவையான பயிற்சிகளை வழங்கி இருக்கும்.

எனவே, இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகளிடம் அல்லது இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் பாலிசி வாங்குவதை போன்றே தேவையான முழு விவரங்களையும் அந்த அதிகாரியிடமிருந்து தெரிந்துகொள்ளலாம். இவருக்குத் துணையாக ஒரு அதிகாரியை அந்த ஏரியாவுக்கு நியமிக்கிறது இன்ஷுரன்ஸ் நிறுவனம்’’ என்றார் அவர்.

கமிஷன், எக்ஸ்சேஞ்ச் மற்றும் புரோக்கரேஜ் மூலம் வங்கிக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு என்பதை முன்பக்கத்தில் உள்ள அட்டவணையைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்