செல்வமகள் திட்டத்தில் மீண்டும் முதலீட்டைத் தொடரலாமா?

?நான் எனது மகள் களுக்காக செல்வ மகள் திட்டக் கணக்கினை போன வருடம் ரூ.1,000 செலுத்தித் தொடங்கினேன்.   அதன்பின் என்னால் அதில் பணம் சேர்க்க முடியவில்லை.  இந்த வருடத்தில் இருந்து மாதம் ரூ.5,000 சேர்க்க எண்ணுகிறேன். நான் மீண்டும் இதில் என் முதலீட்டைத் தொடரலாமா?

மாரியப்பன்.

மெர்வின் அலெக்சாண்டர், போஸ்ட்மாஸ்டர் ஜெனரல், சென்னை.

“குறைந்தபட்சம் ரூ.1,000 செலுத்தி இந்தத் திட்டத்தில் சேரலாம். பிறகு நூறின் மடங்குகளில் ஒவ்வொரு நிதி ஆண்டும் கட்டலாம். குறிப்பிட்ட அளவு, ஒரே தொகைதான் கட்ட வேண்டும் என்பதில்லை. அதிகபட்ச மாக ஒரு நிதி ஆண்டில் 1.5 லட்சம் ரூபாய் வரை கட்ட முடியும். நாம் கட்டுகிற பணத்தை ஒரே தவணையில் தான் கட்ட வேண்டும் என்பதில்லை. மாதா மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டலாம். ஆனால், இந்தத் திட்டத்தில் தொடர்ந்து இருப்பதற்கு ஒரு நிதி ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 கட்ட வேண்டும். இடையில் முதலீடு செய்ய தவறியிருந்தால், அதற்கு ரூ.50 அபராதம் செலுத்தி சேமிப்பைத் தொடரலாம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்