கேட்ஜெட்ஸ்

கார்த்தி

அமேசான் கிண்டில் ஒயாசிஸ்! (amazon kindle oasis)

புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ள பலருக்கு, அதை இ-புத்தகமாக படிப்பது பிடிக்காது. ஏனென்றால், நினைத்த நேரத்தில் புத்தகத்தை எடுத்து ரசித்து படிக்கும் அனுபவம் இ-புத்தகங்களைப் படிக்கும்போது கிடைப்பதில்லை என்பது புத்தக விரும்பிகள் சொல்லும் குறையாக இருந்தது. என்றாலும், புத்தகம் வாசிக்கும் பலரையும் இ-புத்தகம் பக்கம் திருப்பியது, கிண்டில்தான். இதற்கு முன்பிருந்த அமேசான் கிண்டில்களைவிட, இரு மடங்கு விலையில் இப்போது வெளியாகி இருக்கிறது அமேசான் ஒயாசிஸ்.

முந்தைய மாடலான பேப்பர் ஒயிட்டைப் போலவே இருந்தாலும், பக்கங்களை திருப்ப இதில் பொருத்தப்பட்டிருக்கும் பட்டன்கள் புதிதாகவும், அட்டகாசமாகவும் இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தாலே, ஒரு மாதம் வரையிலும் இதனைப் பயன்படுத்த முடியும் என உறுதியளிக்கிறது அமேசான்.
6 இன்ச் ஸ்கிரீனாக இருந்தாலும், முந்தைய மாடல்களை விடவும், மிகவும் குறைவான எடையிலேயே (131 கிராம்) இப்போது வெளிவந்திருக்கும் ஒயாசிஸ் இருக்கிறது.

இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் 4ஜிபி ஸ்டோரேஜ் மூலம் ஆயிரம் புத்தகங்களை சேமித்து வைத்துப் படிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்