கறுப்புப் பணம் ஒழிப்பில் மோடி மேஜிக்!

வி.கோபாலகிருஷ்ணன், நிறுவனர், மணி அவென்யூஸ் (Money Avenues)

டந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பா.ஜ.க. ஜெயிக்க முக்கிய காரணம், கறுப்புப் பணம் பற்றி கொடுத்த வாக்குறுதிதான்.  தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோடி தனது கட்சி ஆட்சி அமைத்தால் கறுப்புப் பணம் குறித்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், வெளிநாட்டில் புதைந்து கிடக்கும் பல லட்சம் கோடி மதிப்பிலான இந்தியக் கறுப்புப் பணம் மீட்கப்படும் என்றும் சொன்னார். மக்களுக்கு இந்தப் பிரச்சாரம் மிகவும் பிடித்திருந்தது. அதனால்தான் மோடிக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தார்கள்.

‘‘தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பல முக்கிய நடவடிக்கைகளை மோடி அரசாங்கம் எடுத்தது. அதன் பயனாக இப்போது கறுப்புப் பணத்தின் புழக்கம் வெகுவாகக் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது’’ என்கிறார் ஆம்பிட் கேப்பிட்டல் நிறுவனத்தின் சி.இ.ஒ. (இன்ஸ்டிடியூசனல் ஈக்விட்டீஸ்) சௌராப் முகர்ஜி. இது தொடர் பாக ஆம்பிட் கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆய்வு என்ன சொல்கிறது என்று பார்ப்போம். 

கறுப்புப் பணம் என்பது இந்தியப் பொருளாதாரத்தில் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்துவரும் ஒரு கொடிய நோய். தற்போதைய சூழலில் வெளிநாட்டில் புழங்கும் இந்திய கறுப்புப் பணம் சுமார் 450 பில்லியன் டாலர்கள் (இன்றைய இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,15,000 கோடி)என்று கணக்கிடப்பட்டு உள்ளது. அது நமது மொத்த பொருளாதார மதிப்பில் சுமார் 20% எனக் கொள்ளலாம். கறுப்புப் பணத்தின் தொகை நமது அந்நிய செலாவணிக் கையிருப்பைக் காட்டிலும் கூடுதல். இந்த அளவு கறுப்புப் பணம் என்பது பல நாடுகளின் மொத்த பொருளாதாரத்தைவிட மிகப் பெரியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்