நாணயம் லைப்ரரி: வேண்டாம் பெர்ஃபக்‌ஷன்... வேண்டும் சுதந்திரம்!

புத்தகத்தின் பெயர் : ஹெள டு பி அன் இம்பெர்ஃபக்‌ஷனிஸ்ட் (How to Be an Imperfectionist)

ஆசிரியர்: ஸ்டீபன் கைஸ் (Stephen Guise)

பதிப்பாளர் : Selective Entertainment LLC

ந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம், ஸ்டீபன் கைஸ் எழுதிய ‘ஹெள டு பி அன் இம்பெர்ஃபக்‌ஷனிஸ்ட்’.    பெர்ஃபக்‌ட்-ஆக  இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக வாழ்வது எப்படி என்பதை இந்தப் புத்தகத்தை விளக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் எடுத்துச் சொல்கிறது.

 பெர்ஃபக்ட்டாய் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விட்டு தொடர்ந்து நம் நிலையில் முன்னேறவேண்டும் என்ற நினைப்போடு வாழ ஆரம்பியுங்கள் என்று சொல்லி ஆரம்பிக்கும் ஆசிரியர், எந்த விஷயத்திலும் எந்தவிதமான குறைகளும் இல்லாமல் இருக்கவேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இருப்பது பலகேடுகளை நமக்கு விளைவித்துவிடும் என்கிறார்.

பெர்ஃபக்ட்டாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் வீட்டினுள்ளேயே இருந்து கொள்ள வேண்டியதுதான். எந்த முயற்சியையும் எடுக்க முடியாது. எல்லாவற்றையும் தள்ளிப்போட வேண்டியிருக்கும். வாழ்க்கையே வெறுத்துப்போகும்.  நல்லதே கண்ணில் தெரியாது போகும். உலக நடைமுறையின் நிஜம் என்பதே நமக்கு பிடிபடாமல்  போய்விடும்.

இது எவ்வளவு மோசமான நிலைமை. இது நமக்குத் தேவையா? அதனாலேயேதான் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும் இம்பெர்ஃபக்‌ஷனிஸ்ட்-ஆக வாழ்வது எப்படி என்பதை இந்தப் புத்தகத்தின் மூலம் சொல்லியுள்ளேன் என்கிறார் ஆசிரியர்.

பெர்ஃபக்‌ஷனிசம் என்றால் என்ன, அதனால் நீங்கள் கவரப்பட்டவரா என்பதை தெரிந்துகொள்ள ஐந்து சூழ்நிலைகளை ஆசிரியர் சொல்கிறார். எதிலும் முடிவெடுக்க தடுமாறுகிறீர்களா, சுற்றமும் நட்பும் தரும் சூழல் உங்களை பயமுறுத்துகிறதா, எதையும் தள்ளிப்போடும் நபரா? சுலபத்தில் நீங்கள் மனச்சோர்வு அடைகிறீர்களா? சுயமரியாதை கொஞ்சம் குறைவாக இருப்பதைப் போல் உணர்வு தென்படுகிறதா?

இதில் எந்தக் கேள்விக்கு நீங்கள் ஆம் என்று பதில் சொன்னாலும், நீங்கள் பெர்ஃபக்‌ஷனிஷத்தினால் கவரப்பட்டவராக இருக்கலாம். நல்லவேளையாக பெர்ஃபக்‌ஷனிஷம் என்பது ஒரு மாற்றமுடியாத மனித குணமல்ல.  அதனால் கொஞ்சம் முயற்சி செய்தால், நீங்கள் படிப்படியாக உங்களை மாற்றிக்கொள்ளலாம் என்கிறார் ஆசிரியர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்