கம்பெனி ஸ்கேன்: பிஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிெடட்!

(NSE SYMBOL: PIIND)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

பிஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை இந்த வாரம் ஸ்கேன் செய்யப்போகிறோம். 1947-ல்  மேவார் ஆயில் & ஜெனரல் மில்ஸ் லிமிெடட் என்ற பெயரில் ராஜஸ்தானில் இருக்கும் உதய்பூரில் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம். 1960-களில் அக்ரோ கெமிக்கலை மார்க்கெட்டிங் செய்யும் தொழிலில் கால்பதித்த இந்த நிறுவனம் வெஜ்ப்ரூ எனும் பிராண்ட்டை விநியோகித்து வந்தது.

இந்தக் காலகட்டத்தில் வடக்கு மற்றும் மேற்கு  இந்தியாவில் தன்னுடைய மார்க்கெட்டிங் நெட்வொர்க்கை நிறுவியது இந்த நிறுவனம். இதே காலகட்டத்திலேயே இந்த நிறுவனம் அக்ரோகெமிக்கல் ஃபார்முலேஷன் துறையில் கால் பதிக்க ஆரம்பித்தது.

1970-களில் கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் தன்னுடைய மார்க்கெட்டிங் நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்த இந்த நிறுவனம் அக்ரோகெமிக்கல்கள் உற்பத்தி செய்வதற்கான தொழிற் சாலைகளை அமைத்தது. மேலும், இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மத்திய அரசின் அறிவியல் மற்றும் டெக்னாலஜி அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.

 இதே காலகட்டத்தில் இந்த நிறுவனம் முதன்முதலாக அக்ரோ பார்முலேஷன்களை ஏற்றுமதி செய்யவும் ஆரம்பித்தது. 1980 மற்றும் 1990-களில் மத்திய கிழக்கு நாடுகளில் அக்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையம் ஒன்றை நிறுவியது. 1990-களில் இந்த நிறுவனத்தின் பெயர் பிஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்று மாற்றப்பட்டு பாலிமர் காம்பவுண்டிங் துறையிலும், பிரத்யேக தேவைக்கேற்ப சின்தஸிஸ் மற்றும் உற்பத்தி செய்யும் துறையில் கால்பதித்தது இந்த நிறுவனம்.

2005-10 வரையிலான காலகட்டத்தில் ஃபாயர் மற்றும் பிஏஎஸ்எஃப் நிறுவனத்துடன் இணைந்து மார்க்கெட்டிங் செய்யும் ஒப்பந்தத்தை செய்து கொண்டது இந்த நிறுவனம். இதே காலகட்டத்திலேயே  ஜம்முவில் ஒரு ஃபார்முலேஷன் ப்ளான்ட்டையும் நிறுவியது. ஜப்பானில் பிஐ ஜப்பான் லிமிடெட் என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதும் இதே காலகட்டத்தில்தான்.  இன்றைக்கு விவசாயத்துக்கான பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து வழங்கும் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு பெரிய நிறுவனமாக திகழ்ந்து வருகிறது பிஐ இண்டஸ்ட்ரீஸ்.  தற்சமயம் மூன்று ஃபார்முலேஷன் தயாரிப்பு நிலையங்களையும், இரண்டு உற்பத்தி நிலையங் களையும் கொண்டுள் ளன இந்த நிறுவனம்.பொதுவான இரண்டு பெரிய தொழிற்பிரிவில் செயல் படுகிறது.

முதலாவதாக, பயிர்பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான பொருட்கள் தயாரிப்புப் பிரிவில் செயல்படும் இந்த நிறுவனம் பல லட்சம் இந்திய விவசாயிகளின் மனதில் இடம்பிடித்த ஒரு நிறுவனமாகத் திகழ்கிறது. இந்தத் தொழிற்பிரிவில் மிகவும் அவசியமான ஒன்றாகிய கிராமப்புற விற்பனை நெட்வொர்க் என்பது கணிசமான அளவில் இந்த நிறுவனத்துக்கு இருக்கவே செய்கிறது எனலாம். சென்ற ஆண்டு இறுதியில் அகில இந்திய ரீதியாக 29 கிளைகளையும், 10000-க்கும் மேற்பட்ட டிஸ்ட்ரிப்யூட்டர்களையும் கொண்டிருந்தது இந்த நிறுவனம். மேலும், இந்த வகையிலான பெருவாரியான வாடிக்கை யாளர்களுக்கு தேவையான தயாரிப்புகளை உற்பத்தி செய்து சரியான நேரத்தில் கொண்டு செல்லும் வசதிகளையும் கொண்டிருக்கிறது.

இரண்டாவது தொழிற் பிரிவாக அக்ரோ கெமிக்கல்கள், இடைநிலைப் பொருட்கள் மற்றும் ஏனைய ரசாயனப் பொருட்களை(ஃபைன் கெமிக்கல்ஸ்) ஒப்பந்த ரீதியிலான உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி வசதிகளை உலக அளவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களுக்காக செய்துதரும் பிரிவை தன்வசத்தே கொண்டுள்ளது இந்த நிறுவனம். இந்த தொழில் பிரிவில் வாடிக்கை யாளர்களுக்காக ஆராய்ச்சி களையும், பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்ட உற்பத்தி வசதிகளையும் செய்துதருகின்றன இந்த நிறுவனம்.

உலக அளவில் கண்டு பிடிக்கப்படும் பயிர்பாதுகாப்பு மருந்துகளை இந்திய விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் முன்னணியில் இருக்கிறது இந்த நிறுவனம். இது போன்ற புதிய கண்டுபிடிப்புகளை செய்யும் நிறுவனங்கள், இந்தியாவிலேயே புதிய தயாரிப்புக்களை தயாரிக்க உகந்தவாறு சின்தஸைஸ் மற்றும் கஸ்டம்ஸ் மேனுஃபேக்சரிங் வசதிகளை பெரிய நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது. இதுபோன்ற வசதிகளை அளிக்கும் பொருட்களில் தன்னுடைய போட்டியை வழங்காமல் விலகி நிற்கிறது இந்த நிறுவனம். இதனால் பெரிய நிறுவனங்கள் பலவும் சின்தஸைஸ் மற்றும் கஸ்டம்ஸ் மேனுஃபேக்சரிங் வசதிகளுக்காக பிஐ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தையே தயக்கமின்றி நாடுகின்றன.

அதேபோல் தான் தயாரிக்கும் பொருட்களில் குறைந்த எண்ணிக்கையிலான பிராண்டுகளையே கொண்டு, அவற்றிலேயே முழுமூச்சாக செயல்பட்டு லாபம் ஈட்டும் எண்ணத்துடன் செயல்படுவதால் நாளடைவில் விவசாயிகள் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் பிராண்டுகளை இந்த நிறுவனத்தால் உருவாக்க முடிகிறது.

உற்பத்தி, ஆராய்ச்சி, மார்க்கெட்டிங், டெக்னாலஜி  என எல்லாவற்றிலும் புதுமை களைச் செய்ய இந்த நிறுவனம் ஆர்வம் காட்டுவதால்,  போட்டியாளர்களிடம் இருந்து வேறுபட்டு நிற்கிறது. செய்முறை ஆராய்ச்சிகள், ப்ளான்ட் இன்ஜினீயரிங்,  நேர்த்தியான உற்பத்தி வசதி, தயாரிப்புகளை குறித்த காலத்தில் பதிவுசெய்தல்,  கிராமப்புற மார்க்கெட்டிங் வசதி மற்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் பிராண்ட் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் அக்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் பலவும் பிஐ இண்டஸ்ட்ரீஸையே நாடி வருகின்றன.

பிஐ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி வசதிகள் மற்றும் தரநிர்ணய ஆய்வகங்கள் ஐஎஸ்ஓ-9001,  14001,  17025 போன்ற பல தரச் சான்றுகளை பெற்றுள்ளன. தவிர, அனுபவமிக்க வல்லுனர்களை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்