ஷேர்லக்: பெயரை மாற்றும் நிறுவனங்கள்... முதலீட்டாளர்கள் உஷார்!

‘‘இந்த வாரம் கவர் ஸ்டோரி என்ன?’’ என்று கேட்டபடி நம் எதிரில் உட்கார்ந்தார் ஷேர்லக். தயாராக இருந்த கவர் ஸ்டோரியின் பக்கங்களை அவரிடம் நீட்டினோம். வேகமாக ஒரு பார்வை பார்த்தவர், ‘‘அருமையான அனாலிசிஸ்’’ என்று புகழ்ந்தார். அவருக்கு சூடான ஏலக்காய் டீ தந்து விட்டு கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம். நம் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொன்னார் அவர்.

‘‘நடப்பு 2016-ம் ஆண்டில் இதுவரைக்கும் ஏறக்குறைய 50-க்கும் மேற்பட்ட பட்டியலிடப் பட்ட நிறுவனங்கள் அவற்றின் பெயரை மாற்றி இருக்கின்றனவே?’’

‘‘சினிமா நடிகர், நடிகைகள் பெயரை மாற்றிக் கொண்டு ‘ரீஇன்ட்ரடியுஸ்’ ஆகிற மாதிரி பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட சில நிறுவனங்கள் டிரெண்டுக்கேற்ப தங்கள் பெயரை மாற்றி, லாபம் சம்பாதிக்க நினைக்கின்றன. வங்கிக் கடனை ஒழுங்காக செலுத்தாத இந்த நிறுவனங்கள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்வதன் மூலம் தவறுகளில் இருந்து தப்பிக்க நினைக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை 50 நிறுவனங்கள் தங்கள் பெயரை மாற்றி புதிய அவதாரம் எடுத்திருக்கின்றன. எந்தெந்த செக்டார்கள் சிறப்பாக இருக்கிறதோ, அதற்கு ஏற்ப பெயரை மாற்றிக் கொண்டு முதலீட்டாளர்களை கவர்ந்து இழுப்பது இது போன்ற நிறுவனங்களின் நோக்கம். இப்படி பெயர் மாற்றும் நிறுவனங்களில் முதலீடு செய்யும் முன் உஷாராக இருப்பது மிக அவசியம். தற்போதைய நிலையில் ஆன்லைன், டெக்னாலஜி, இன்ஃப்ரா, இன்ஃபோடெக் போன்ற வார்த்தைகளை கம்பெனி பெயர்களுடன் இணைத்துக் கொள்ளும் நிறுவனங்களின் ஃபண்டமென்டலை ஆராய்ந்து முதலீடு செய்து நல்லது’’.

‘‘ஒரு வழியாக எஸ்பிஐ துணை வங்கிகள் இணைப்புக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது. இனி என்ன நடக்கும்?’’

‘‘இந்தியாவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்று எஸ்பிஐ. ஆனால், அதிக வாராக் கடன் இருக்கும் வங்கியாகவும் இது இருக்கிறது. இந்த நிலையில், இந்த இணைப்பு நடவடிக்கை மூலம் செலவுகளைக் குறைத்து தன்னுடைய நிதி நிலையைக் கூட்டுவதற்கு எஸ்பிஐ திட்டமிடப் பட்டுள்ளது. அதன்படி எஸ்பிஐ உடன் அதன் 5 துணை வங்கிகளையும் மற்றும் பாரதிய மகிளா வங்கியையும் ஒருங்கிணைக்க முடிவு செய்யப் பட்டது. தற்போது இதற்கான ஒப்புதல் மத்திய அரசிடமிருந்து கிடைத்துவிட்டது. இனி துணை வங்கிகளும் பாரத ஸ்டேட் வங்கி என்ற பெயரிலேயே செயல்படும். இந்த இணைப்பு எஸ்பிஐக்கு சாதகம்தான்  என்று அதன் தலைவர் அருந்ததி பட்டாசார்யாவும் கூறியுள்ளார்.

இவற்றில் ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கிகள் மட்டும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளன. இந்த அறிவிப்பை அடுத்து இதன் பங்குகள் 52 வார அதிகபட்ச விலையை அடைந்து உள்ளன. அடுத்த கட்டமாக, சின்ன சின்ன வங்கிகளை வேறு வங்கிகளுடன் சேர்க்கும் நடவடிக்கையை அரசு முடுக்கி விட்டிருக்கிறது. எந்த வங்கி எந்த வங்கியுடன் இணையப் போகிறது என்பதுதான் சஸ்பென்ஸ்’’.

‘‘அமெரிக்காவில் வட்டி விகித உயர்வு புஸ்வானமாகிவிட்டதே!’’

‘‘புதன்கிழமை அன்று நடந்த அமெரிக்க ஃபெடரல் கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட வில்லை. 2016 மற்றும் 2017-ம் ஆண்டில் அமெரிக்காவில் எதிர்பார்த்த அளவுக்கு பொருளா தார வளர்ச்சி இருக்காது என்கிற கணிப்பில் இந்த முடிவு இப்போது எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அங்கு வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், இந்த ஆண்டில் இரு முறை வட்டி விகிதம் அதிகரிக்க இருப்பதாக சிக்னல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இன்னும் வேலைவாய்ப்புகள் அதிகரித்த பிறகு வட்டி உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல், பேங்க் ஆஃப் இங்கிலாந்து, பேங்க் ஆஃப் ஜப்பானும் இப்போதைக்கு வட்டி விகித மாற்றத்தை நிறுத்தி வைத்துள்ளன. இதனால் தங்கம் விலை அதிகரித்திருக்கிறது’’.

‘‘ப்ரிஎக்ஸிட் (Brexit) என்று எல்லோரும் பேசுகிறார்களே, ஒருவேளை பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து  விலகினால் என்னவாகும்?’’

‘‘ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இருக்க வேண்டுமா என்பது குறித்து பிரிட்டன் மக்களிடம் கருத்துக் கேட்கும் வாக்கெடுப்பு வருகிற 23-ம் தேதி நடக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்