கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

இரா.ரூபாவதி

ச்சா எண்ணெய்யின் விலைப்போக்கு குறித்து குட்வில் கமாடிட்டி நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் தினேஷ் பாலாஜி விளக்குகிறார்.

கச்சா எண்ணெய்!

“கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அதிக வரத்துதான். கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து 70%  அளவுக்குக் கச்சா எண்ணெய்  விலை குறைந்துள்ளது. இந்த வருடமும் விலை குறையும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வியாழன் அன்று கச்சா எண்ணெய்யின் விலை 3%  உயர்ந்தது. உற்பத்தியைக் குறைக்க ரஷ்யா, ஈரானுடன் மேலும் பேச்சு நடத்தும் எனத் தகவல் வெளியானதால், விலை சற்று ஏறியது. மார்ச் மாதத்தில் வெனிசுலா, கத்தார், ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டம் நடத்த உள்ளன. ஜனவரியில் இருந்த அளவுக்கு மட்டுமே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற முடிவை எடுக்கவே இந்தக் கூட்டம். கச்சா எண்ணெய் சந்தையில் தற்போது நிலவும் மந்தநிலை காரணமாக உற்பத்திக் குறைவு குறித்த முடிவு எடுக்கப்படாது எனப் பல வர்த்தகர்கள் நினைக்கிறார்கள்.  உலக அளவில் 5,000 நபர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் என ஆயில் சர்வீஸ் வழங்கும் ஹாலிபேர்ட்டன்  நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் செய்திகள் வெளியானபிறகு கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் 3% அளவுக்குச் சரிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்