போர்க்கால நடவடிக்கை தேவை!

ஹலோ வாசகர்களே..!

திர்வரும் 2016 - 17-ம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்திருக்கிறார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு. இந்த பட்ஜெட்டைப் பொறுத்தவரை முதல் மகிழ்ச்சியான விஷயம், ரயில் பயணக் கட்டணம் உயர்த்தப்படாததுதான். நீண்ட தூர பயணத்துக்கு பேருந்துகளைவிட ரயில்களையே சாதாரண மனிதர்கள் தேர்வு செய்கின்றனர். ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டால், சாதாரண மனிதர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே, அமைச்சர் அதை செய்யாமல் விட்டது சரியான முடிவே. என்றாலும் சரக்குக் கட்டணம் கூடிய விரைவில் மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார். சரக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டால், எல்லா பொருட்களின் விலையும் உயரும். இதனால் விலைவாசி உயர்ந்து, சாதாரண மக்கள் பாதிக்கப்படவே செய்வார்கள்.

பொதுவாக, ரயில் பட்ஜெட்டில் புதிய ரயில் சேவைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்த பட்ஜெட்டில் தரப்படவில்லை. ஆனால், ரயில்வே துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கும் திட்டங்கள் பலவற்றை தீட்டியிருக்கிறார் ரயில்வே  அமைச்சர்.

சென்னையில் தயாராகும் கார்களை வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லவும், வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு பகுதிகளை பப்ளிக் - பிரைவேட் - பார்ட்னர்ஷிப் மூலம் தனி சரக்கு ரயில் பாதைகளை அமைக்க  திட்டம் தீட்டியதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள துறைமுகங்களையும் இணைக்கும் திட்டங்களைத் தீட்டி இருக்கிறார் ரயில்வே துறை அமைச்சர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்