குளோஸ் எண்டட் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாமா?

இரா.ரூபாவதி

ங்குச் சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் செயல்பட்டுவரும் நிலையில் பல ஃபண்ட் நிறுவனங்கள் குளோஸ் எண்டட் ஃபண்ட் திட்டங்களை தொடங்குவதற்கான வேலைகளை செய்து வருகிறது.

சில ஃபண்ட் நிறுவனங்கள் குளோஸ்  எண்டட் ஃபண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்து வதற்கு அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பித்துள்ளது. குளோஸ் எண்டட் ஃபண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தும் போது முதலீட்டாளர்கள் சிலர் இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தயாராக இருப்பார்கள்.

இந்த வகை ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா, முதலீடு செய்யும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும், இந்த வகை ஃபண்டு களில் உள்ள சிக்கல் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

குளோஸ் எண்டட் ஃபண்டின் தன்மை எப்படிப்பட்டது என்பது குறித்து நிதி ஆலோசகர் முத்து கிருஷ்ணனிடம் கேட்டோம்.

“குளோஸ் எண்டட் ஃபண்ட் என்பது முதலீடு செய்து குறிப்பிட்ட காலம் கழித்துதான் அந்த ஃபண்டில் போட்ட முதலீட்டை திரும்ப வெளியே எடுக்க முடியும். அதாவது, முதலீடு செய்த தொகையை திரும்ப எடுப்பதற்கு கட்டுப்பாடு உண்டு. அதாவது, முதலீட்டுக் காலம் எவ்வளவு என்பது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமே முடிவு செய்யும். உதாரணமாக, 3, 5 ஆண்டுகள் என முதலீட்டுக் காலத்தை ஃபண்ட் நிறுவனங்கள் நிர்ணயிக்கும். இந்த வகை ஃபண்டுகளுக்குதான் குளோஸ்  எண்டட் ஃபண்ட் என்று பெயர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்