பேசிக் டீமேட் அக்கவுன்ட்: எங்கே ஆரம்பிப்பது?

கேள்வி - பதில்

?பேசிக் டீமேட் அக்கவுன்ட்டுக்கு கட்டணம் எதுவுமில்லை என்கிறார்கள்.  இந்தக் கணக்கை எங்கே, எப்படி ஆரம்பிப்பது ?

சிவராமன்,

ஏ.ஆர்.வாசுதேவன், மேனேஜர், சிடிஎஸ்எல், தமிழ்நாடு

“பங்குச் சந்தையில் பங்குகளை வாங்குவதற்கான பேசிக் டீமேட் அக்கவுன்ட்டை எந்த ஒரு டெபாசிட்டரி பார்ட்டிசிபன்ட் (DP) நிறுவனத்திடமும் துவங்கலாம். ரூ.50,000 வரைக்கும்  பங்குகள் இருந்தால் வருடாந்திர சந்தா இல்லை. ரூ.50,001-லிருந்து ரூ.2 லட்சம் வரை வருடத்துக்கு ரூ.100 ஆண்டு சந்தாவாக வசூலிக்கப்படும். ரூ.2 லட்சத்துக்கு மேல் பங்குகள் இருந்தால், டிபி-யின் அறிவிக்கப்பட்ட சந்தா வசூலிக்கப்படும். இது தவிர, ஒவ்வொரு பங்கு விற்பனையின்போதும் டிபி-யின் அறிவிக்கப்பட்ட பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்படும். பிஎஸ்டிஏ (BSDA) வசதியைப் பெற மேலும் சில நிபந்தனைகள் உள்ளன.  கூடுதல் விவரங்களுக்கு டெபாசிட்டரியின் வலைதளத்தை பார்க்கவும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்