251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்... நிஜத்தில் சாத்தியமா?

கோ.இராகவிஜயா

வெறும் 251 ரூபாய்க்கு ஒரு ஸ்மார்ட் போன்... நம்பவே முடியவில்லை பலராலும். ஆனால், நம் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்காரே ‘ஃப்ரீடம் 251’ என்கிற பெயரில் அதை அறிமுகப்படுத்தியபோது அதை எப்படி நம்பாமல் இருக்க முடியும்?

நொய்டாவில் இயங்கும் ‘ரிங்கிங் பெல்ஸ்’ என்ற இந்திய நிறுவனம் இந்த ஸ்மார்ட்  போனை தயாரித்து வெளியிடப் போகிறது என்கிற தகவல் வெளியானவுடன், மூன்று, நான்கு போன்களையாவது வாங்கிட வேண்டும் என்கிற வெறியில் இருந்தவர்கள் பலர்.  விளைவு, இந்த போன் வாங்குவதற்கான ஆன்லைன் முன்பதிவு ஆரம்பமான சில நிமிடங்களிலேயே அந்த நிறுவனத்தின் வலைதளம் ஸ்தம்பித்துப் போனது. அதாவது, ஒரு நொடிக்கு ஆறு லட்சம் ‘ஹிட்’கள் பதிவாகி இருக்கிறது. இது கூகுளின் ஒரு நொடியின் ஹிட்டைவிட அதிகம். இத்தனைக்கும் இந்த போனை இனிமேல்தான் தயாரிக்க வேண்டும் என்கிறது ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்