கம்பெனி ஸ்கேன்: ஹெச்டிஎஃப்சி பேங்க் லிமிடெட் (NSE SYMBOL: HDFCBANK)

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங்கில்  எடுத்துக் கொண்டுள்ள நிறுவனம் ‘ஹெச்டிஎஃப்சி பேங்க் லிமிடெட்’ என்னும் நம்மில் பெரும்பான்மையானோருக்கு பரிச்சயமான தனியார் வங்கி ஆகும்.

இந்திய ரிசர்வ் வங்கி, வங்கித் துறையில் தனியார் பங்களிப்புக்கான வாய்ப்பைத் தர ஆரம்பித்த வருடமான 1994-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டு, 1995-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஒரு ஷெட்யூல்டு கமர்ஷியல் வங்கியாக செயல்பட ஆரம்பித்தது ஹெச்டிஎஃப்சி வங்கி. 1977-ம் ஆண்டு ஒரு வீட்டுவசதிக் கடன் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வரும்  ஹெச்டிஎஃப்சி நிறுவனமே ஹெச்டிஎஃப்சி வங்கியின் புரமோட்டர் நிறுவனம் ஆகும். உலகத்தரம் வாய்ந்த வங்கியாக வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆரம்பிக்கப் பட்டதுதான் ஹெச்டிஎஃப்சி வங்கியாகும். 2000-ம் ஆண்டு டைம்ஸ் பேங்க் லிமிடெட் எனும் வங்கியை தன்னுடன் இணைத்துக் கொண்ட ஹெச்டிஎஃப்சி வங்கி, 2008-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன் செஞ்சுரியன் பேங்க் ஆஃப் பஞ்சாப் வங்கியை தன்னுடன் இணைத்துக்கொண்டது. டிசம்பர் 2015, இறுதியில் ஹெச்டிஎஃப்சி வங்கி இந்திய அளவில் 2,505 ஊர்களில் 4,281 கிளைகளுடனும் 11,843 ஏடிஎம் களுடனும் செயல்பட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்