ஷேர்லக் : கரடி சந்தையில் பங்குகளை திரும்ப வாங்கும் அதிபர்கள்!

‘‘எக்கனாமிக் சர்வே எப்படி?’’ என்று கேட்டபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ‘‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’’ என்று கேட்டபடி அவரை உட்கார வைத்தோம். ‘‘மிகுந்த நம்பிக்கையுடன் இந்த ரிப்போர்ட்டை தயார் செய்திருக்கிறார் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன்.

 குறுகிய காலத்தில் நம் ஜி.டி.பி.யானது 7% முதல் 7.75% வளருவதற்கு வாய்ப்பிருப்பதாக சொல்லி இருக்கிறார். அடுத்த சில ஆண்டுகளில் 8 சதவிகித வளர்ச்சியைக் காணவும் வாய்ப்புண்டு என்று சொல்லி இருக்கிறார். 2016 - 17-ம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.5 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வளரும் நாடுகளில் நம் இந்தியா வேகமாக வளர்ந்தாலும் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான துறைகளில் முதலீடு, பருவநிலை மாற்றங்களினால் விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் போன்ற விஷயங்களில் நாம் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதையும் எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

மானியத்தை குறைக்கும் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என்று சொன்னதுடன், ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கு 10 கேஸ் சிலிண்டர் போதும் என்று சொல்லி இருக்கிறார். இவர் சொன்ன விஷயங்களில் எத்தனை பட்ஜெட்டில் எதிரொலிக்கிறது என்று திங்கட்கிழமை அன்றுதான் தெரியும்’’ என்றவருக்கு சூடான டிகிரி காப்பி கொடுத்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்