பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்..!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

நிஃப்டி ஃப்யூச்சர்ஸ்:  பிப்ரவரி மாத எஃப் அண்ட் ஓ ஒப்பந்த முதிர்வு தினமான வியாழக்கிழமை அன்று சந்தை இறக்கத்தை கண்டு பல முதலீட்டாளர்களை கலங்க வைத்தது. ஓப்பன் இன்ட்ரஸ்ட்  பல மாத லோவாக இருந்தது. மேலும், அண்மை மாதங்களின் சராசரியை விட குறைவாக இருந்தது.

அதேநேரத்தில், வெள்ளிக் கிழமை எதுவும் நடக்காதது போல் சந்தை ஏற்றத்தில் காணப்பட்டது. இதற்குக் காரணம், வெள்ளிக்கிழமை  அன்று பெரும்பாலானோர் அவர்களின் லாங்க் மற்றும் ஷார்ட்களை அட்ஜெஸ்ட் செய்ததாகும்.

மார்ச் மாத சீரிஸ், பெரும்பாலான டிரேடர்கள் நிஃப்டி 7000 புட் ஸ்ட்ரைக் என்பதில் அதிக கவனம் செலுத்துவதாக இருக்கிறது. வரும் வாரத்தில், இந்தப் புள்ளி என்பது முக்கிய சப்போர்ட் இடமாக இருக்கும். சந்தை கரடியின் பிடியில் சிக்கினால் மட்டுமே இந்த நிலை உடைக்கப்படும்.

பிப்ரவரி 29-ம் தேதி திங்கள்கிழமை மத்திய பட்ஜெட் என்கிற பெரிய நிகழ்வு இருக்கிறது. இந்த நிலையிலே சந்தை ஏறத் தொடங்கினால், பழைய 7150 புள்ளிகளைத் தாண்டி சந்தை மேலே செல்லக்கூடும். இது பட்ஜெட்டில் பங்குச் சந்தைக்கு சாதகமான விஷயங்கள் என்னென்ன இருக்கின்றன என்பதைப் பொறுத்து இருக்கிறது. பட்ஜெட்டுக்குப்பிறகு சில தினங்களில்  நிஃப்டி 300 புள்ளிகள் நகர  வாய்ப்பிருக்கிறது.

பட்ஜெட்டுக்குப்பின், லாங்க் ஸ்ட்ராங்கிள் (long strangle) பேட்டர்ன்-ஐ பின்பற்றுவது பாதுகாப்பாக இருக்கும். நிஃப்டி 6500 புட் - 7500 கால் வாங்கலாம். இதற்கான செலவு சுமார் 60-65 பாயின்ட்களாக இருக்கும் மற்றும் ஸ்டாப் லாஸ் 25 பாயின்ட்களாக  வைத்துக் கொள்ளவும். பட்ஜெட்டைத் தாண்டி அதிகமாக சந்தை ஏறினால், இந்த ஸ்ட்ராங்கிள்-ஐ விற்க வேண்டிய நிலை 150-200 பாயின்ட்களாகும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்