பாராட்டு பெறும் நிதி அமைச்சருக்கு ஓர் எச்சரிக்கை!

ஹலோ வாசகர்களே..!

2016 - 17-ம் நிதி ஆண்டுக்காக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் பல தரப்பினரிடமிருந்து பாராட்டுகளை பெற்றிருக்கிறது. சமீப காலத்தில் விவசாய வளர்ச்சிக்கு உதவுகிற வகையில் இவ்வளவு திட்டங்களை வேறெந்த நிதி அமைச்சரும் அறிவித்ததில்லை; இத்தனை ஆயிரம் கோடி ரூபாயை வேறெந்த நிதி அமைச்சரும்  ஒதுக்கியதில்லை என எல்லோரும் புகழ்வதை நாமும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது.கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு உதவுகிற வகையில், நாடு முழுக்க உள்கட்டமைப்பு வசதியைப் பெருக்குவதில், குறிப்பாக சாலை வசதிகளை பெருக்குவதில், நிதி அமைச்சர் காட்டியிருக்கும் கவனம் உண்மையிலேயே போற்றத்தக்கது. ஆனால்...,

பல நல்ல விஷயங்களை செய்தவர் சில மோசமான முடிவுகளை எடுக்கத் தவறவில்லை. அதில் முக்கியமானது, ஓய்வுக் காலத்தில் பெறப்படும் பிஎஃப் தொகைக்கு 60% வரி விதித்தது. இன்றைய நிலையில், நம் நாட்டில் சமூகப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் எந்தவொரு திட்டமும் இல்லை. வேலை செய்யும் காலத்தில் கட்டாயத்தின் பேரில் சேமிக்கும் பிஎஃப் பணம்தான், ஓய்வு பெற்றபின் ஒருவருக்குக் கடைசியாகக் கிடைக்கும் பெரிய தொகையாக இருக்கிறது. அப்படிக் கிடைக்கும் தொகைக்கு வரி செலுத்த வேண்டும் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

தேசிய பென்ஷன் திட்டத்தை (NPS) பிரபலமாக்கவே இந்த வரி விதிப்பு என்கிற அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் திட்டத்தை பிரபலப்படுத்த வேறு எத்தனையோ வழிமுறைகள் இருக்கும்போது, நடுத்தர வர்க்கத்தினருக்கு ஓய்வு பெற்றபின்  கிடைக்கும் தொகையில் கை வைப்பானேன்? கறுப்புப் பணத்தை பதுக்கியவர்களுக்கு 45% வரிச் சலுகை தந்துவிட்டு, அப்பாவிகள் அடிவயிற்றில் அடிப்பானேன்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்