பட்ஜெட் 2016: குறைந்த வருவாய் பிரிவினருக்கு கூடுதல் சலுகை!

பட்ஜெட் ஸ்பெஷல்சி.சரவணன்

வ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதெல்லாம், மாத சம்பளதாரர்கள், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்று எதிர்பார்ப்பது வழக்கம்.

தற்போது பொதுப் பிரிவினருக்கான (60 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்) வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உள்ளது. விலைவாசி உயர்வால், வருமான வரி விலக்கு உச்சவரம்பு குறைந்தபட்சம் ரூ.3 லட்சமாகவாவது உயர்த்தப்படும் என்கிற கோரிக்கை பரவலாக எழுந்தது.       

வரி விலக்கு உச்சவரம்பு, வரி விகிதத்தில் மாற்றமில்லை!   

2016-17-ம் ஆண்டுக்கான அடிப்படை வருமான வரி விலக்கு உச்சவரம்பிலும், வருமான வரி விகிதங்களிலும் மாற்றம் எதுவும் கொண்டு வரப்படவில்லை. இது மாத சம்பளதாரர்களுக்கு ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது.   

ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்குக் குறைவாக வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு பிரிவு 87-ஏ-ன் கீழ் தற்போது அளிக்கப்பட்டுவரும் வரிக்கழிவு ரூ.2,000-லிருந்து ரூ.5,000-ஆக உயர்த்தப்பட் டுள்ளது. இதன் மூலம் ரூ.3,000 கூடுதல் வரிச்சலுகை கிடைக்கும். இதன் மூலம் இரண்டு கோடி பேர் பலன் அடைவார்கள்.

இப்படிச்  செய்வதற்கு பதிலாக,  அடிப்படை வரம்பில் ரூ.30,000 அதிகரித்திருந்தால், அனைத்து வருமானப் பிரிவினரும் பலன் அடைந்து இருப்பார்கள்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்