பட்ஜெட் 2016: மாற்றம்... முன்னேற்றம்... ஆனால்..!

அனந்த நாகேஸ்வரன், பொருளாதார சிந்தனையாளர், சிங்கப்பூர்.

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றாவது நிதி ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில், நிதி அமைச்சர் தற்போது தாக்கல் செய்திருக்கும் இந்த பட்ஜெட்டில் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் பார்க்க முடிகிறது. ஆனால், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், இந்தியப் பொருளாதாரம் குறித்து அவ்வப்போது வலியுறுத்தி வந்த விஷயங்களை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதை இந்த பட்ஜெட்டில் மிகத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

ஏனெனில், இந்தியப் பொருளாதாரத்தின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இந்த பட்ஜெட் முழுமையாக திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனால் இந்த பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் திட்டங்களோ, அம்சங்களோ முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.

வளர்ச்சியை மறந்துவிட்ட பட்ஜெட்!

இந்த பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை, வருமானப் பற்றாக்குறை மற்றும் அடிப்படை பற்றாக்குறைகளைக் குறைக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வருமானப் பற்றாக்குறையின் இலக்கு 2.5 - 2.8 சதவிகிதமாகவும், செயல்பாட்டு வருமானப் பற்றாக்குறையை 1.5 - 2.0 சதவிகிதமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை 2018 - 19-ம் ஆண்டுக்குள் ஜீரோ சதவிகிதத்துக்குக் குறைக்க வேண்டும் என்றும் திட்டமிடப் பட்டுள்ளது.

நமது மொத்த ஜிடிபியில் நம்முடைய நிதிப் பற்றாக்குறை 3 சதவிகிதத்துக்கு கீழ் குறைவது என்பது மிகக் கடினமான ஒன்று. நம்முடைய வருவாய் மற்றும் செலவீனங்களை சமநிலைப் படுத்த இடைக்கால திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும், 2018-19-ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறையை பூஜ்யத்துக்குக் கொண்டுவருவது சாதாரண விஷயமல்ல. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்