பட்ஜெட் 2016: இது விவசாயம் மற்றும் கிராம வளர்ச்சிக்கான பட்ஜெட்டுங்கோ!

பட்ஜெட் ஸ்பெஷல்ஜெ.சரவணன்

“இந்தியாவின் இதயம் கிராமங்களில்தான் இருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயம்தான்” என்றார் மகாத்மா காந்தி. ஆனால், இன்று அந்த கிராமங்கள் எப்படி இருக்கின்றன?

பருவமழைப் பொய்ப்பு, விவசாயப் பொருட்களுக்கான நியாய விலை இல்லாமை, விவசாயிகளின் கடன் நெருக்கடி, விவசாயிகள் தற்கொலை, கிராமங்களில் இருந்து நகரத்துக்கு இடம்பெயர்தல் என விவசாயிகள் சந்திக்காத  பிரச்னைகளே இல்லை.  உலகுக்கே சோறு போடும் விவசாயத்துக்கு இவ்வளவு பிரச்னைகள் இருந்தும் இதுவரையிலும் எந்தவொரு அரசும் அது பற்றி பெரிதாக கவலைப்பட்டு, எந்தத் தீவிர நடவடிக்கையும்  எடுத்ததில்லை.

கடந்த டிசம்பர் காலாண்டில் விவசாயத் துறையின் வளர்ச்சி 1% மட்டுமே. 2015 - 16-ம் நிதி ஆண்டின் விவசாயத் துறை வளர்ச்சியும் 1.1% எனக் கணிக்கப்பட்டுள்ளது. தினம் தினம் சோற்றில் கை வைக்கும் போதுகூட, இந்த அரசியல்வாதி களுக்கு நம் பிரச்னை நினைவுக்கு வராதா என்று விவசாயிகள் குமுறினார்கள்.

அந்தக் குமுறலுக்கு இப்போது தீர்வு கிடைத்திருக்கிறது. தற்போது முதன்முறையாக விவசாயத்தை முன்னிலையாக வைத்து ஒரு பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. அவர் அப்படி என்ன செய்து விட்டார்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்