பட்ஜெட் 2016: பல பாராட்டுகள், சில அதிருப்திகள்!

த்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் இந்த பட்ஜெட் பற்றி பலரும் பலவிதமாக கருத்து சொல்லிவிட்டார்கள். ஆனால், இந்த பட்ஜெட் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றது விகடன் மாணவ நிருபர் படை. பல தரப்பினரையும் பேட்டி கண்டு அவர்கள் அனுப்பிய விவரங்கள் இதோ!

 ரியல் எஸ்டேட்டில் முதலீடு அதிகரிக்கும்!

சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சி.என்.கோபிநாத், ‘‘இந்த பட்ஜெட்டில் வங்கிகளைப் பொறுத்தவரை, ஏமாற்றம்தான். ஏனெனில் ரூ.25,000 கோடி நிதி மட்டுமே கொடுப்பதாக தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடன்களால் நிதி நெருக்கடியில் இருக்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு இது போதுமானதாக இருக்காது.

ரிசர்வ் வங்கி ரெபோ ரேட் (ரிசர்வ் வங்கியிடம் இருந்து மற்ற வங்கிகள் பெறும் கடன் தொகைக்கு செலுத்தப்படும் வரி) குறைக்கும்போது வங்கிகளும் கடன் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டியிருக்கும். வாராக் கடன் வசூலிப்பில் உறுதுணையாக இருக்கும் சர்பாஸி சட்டம் 2002 சட்டத்தில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் வங்கியின் வருமானம் தராத சொத்துக்கள் பிரச்னையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் வரும் என்பது போக போகத்தான் தெரியும்.

முதல் முறையாக வீட்டுக் கடன் வாங்க இருப்பவர்களுக்கு இந்த பட்ஜெட் நல்ல விஷயங்களை தருகிறது. ஆண்டுக்கு ரூ.50,000 அதிகமாக வட்டிக் குறைப்பை அனுமதித்துள்ளது. இதனால் கடன் வட்டி விகிதம் குறைந்து, முதலில் இருந்து குறைக்கப்படும் பணத்துக்கு வருமான வரி விலக்கு இருப்பதால், மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய மக்கள் முன்வரக்கூடும்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்