பட்ஜெட் தாக்கம்... சந்தை ஏற்றத்தில் செல்லுமா?

ஷேருச்சாமி ஆரூடம்பட்ஜெட் ஸ்பெஷல்

`புது வருஷம் தொடங்கியதும் இது முதலீடு செய்யவேண்டிய காலம், பட்ஜெட்டுக்குபின் சந்திப்போம் அன்பழகன் (கன்)' என்று சொல்லியிருந்தார் ஷேருச்சாமி. பட்ஜெட் வாசித்து முடித்த அடுத்த நாள் மாலை அவரைப் பார்க்க போகலாம் என்று முடிவெடுத்து, ‘‘சாமீகளே, உங்களை சந்திக்க வரலாமே!’’ என்று கேட்டு, ஷேருச்சாமிக்கு ஒரு எஸ்எம்எஸ் போட்டேன். ‘‘ஓ யெஸ், கம் ஃபார் டின்னர்’’ என்று அடுத்த கணமே பதில் வந்தது.

அடுத்த நாள் நானும் செல்வமும் (செல்) கிளம்பி சாமியின் பங்களாவுக்கு மாலை ஆறரை மணியளவில் போய்ச் சேர்ந்தோம். வழக்கமான வெடிச்சிரிப்புடன் வரவேற்ற சாமி, ‘‘அப்புறம் என்ன விஷேசம்?’’ என்று கேட்டபடி டயலாக்கை ஆரம்பித்தார்.

‘‘என்ன சாமி, உங்களுக்கு தெரியாததா, பட்ஜெட்டுக்கு பின்னால் வாங்கன்னு சொல்லி அனுப்பிச்சீங்க. அதனால் ஓடோடி வந்தோம்’’ என்றான் செல். ‘‘பட்ஜெட் பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்லீட்டீங்கன்னா நாங்களும் கேட்டுக்குவோம். எங்களுக்கு நீங்க சொன்னீங்கன்னா, ஊருக்கே சொன்ன மாதிரி!’’ என்றோம்.

“இந்த பட்ஜெட் கொஞ்சம் இன்றைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அதற்குத் தேவையான வகையில் பொறுப்புணர்வுடன் போடப்பட்டிருக்கும் பட்ஜெட்டுன்னு சொல்லலாம். பட்ஜெட்டில் சொல்லப்பட்டி ருக்கும் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகிற அளவுக்கு பொருளாதார செயல்பாடுகளும் ஏனைய பொருளாதாரம் சார்ந்த மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய நிகழ்வுகளும் நடந்துச்சுன்னா, சுபிட்சகாலம் ரொம்ப தொலைவில் இல்லை என்று சொல்லலாம்.

உதாரணத்துக்கு, கச்சா எண்ணெய் விலை இதே லெவல்களிலே பெரிய ஏற்றம் இல்லாம அடுத்த இரண்டு வருஷத்துக்கு  இருந்துச்சுன்னா அது பெரிய அளவில பொருளாதாரத்துக்கு பக்கபலமா இருக்கும் இல்லையா அது போலத்தான்” என்று விளக்கி சொன்ன சாமியிடம், ‘‘பட்ஜெட் எந்தெந்த செக்டாருக்கு எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்?’’ என்றேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்