உற்சாகத்தில் புறப்பட்ட ஏற்றுமதியாளர்கள்... இன்றே தொழில் தொடங்குவோம்!

ஜெ.சரவணன்

டந்த பிப்ரவரி 27 மற்றும் 28 தேதிகளில் நாணயம் விகடனும், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பும் (FIEO-Federation Of Indian Export organization) இணைந்து ‘ஏற்றம் தரும் ஏற்றுமதி’ என்கிற இரண்டு நாள் பயிற்சி வகுப்பினை ஈரோட்டில் நடத்தியது.

இந்தப் பயிற்சி வகுப்பில் முதலில்  ஃபியோவின் தென் மண்டல இணை துணை பொது இயக்குநர் உன்னி கிருஷ்ணன் பேசினார்.  “உலகச் சந்தைகளில் நிலவும் பொருளாதார மந்தநிலையால் இந்தியச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் மட்டுமே இந்தியாவுக்கான சந்தை இல்லை. மேலும், இந்த மந்தநிலை தற்காலிகமானதே. மத்திய அரசு இந்திய ஏற்றுமதியை ஊக்குவிக்கப் பல்வேறு திட்டங் களையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அதனைப் பயன்படுத்தி ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி தொழிலை நன்கு செய்து லாபம் அடையலாம்” என்று கூறினார்.அவரைத் தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் எஸ். சிவராமன், ஏற்றுமதி தொழில் தொடங்க தேவை யான அடிப்படை விஷயங்களையும், சட்ட ரீதியான நடைமுறைகளையும் நுணுக்கமாக விளக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்