பிசினஸ் சீக்ரெட்ஸ் - 35

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தொழில் முனைவோர்களுக்குத் துணை நிற்கும் பிராக்டிகல் தொடர்‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!

வெற்றிகரமான பிசினஸ்மேனாக திகழ்வதற்கு நம்மிடம் இருக்க வேண்டிய மனோபாவங்கள் குறித்துப் பார்த்து வருகிறோம். ஸ்டீவன் கோவி தன்னுடைய ‘7 Habits of Highly Effective     People’ என்கிற புத்தகத்தில் ‘ஸீக் டு அன்டர்ஸ்டான்ட் தன் டு பி அன்டர்ஸ்டுட்’ (Seek to understand than to be understood) என்கிற அருமையான கருத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

நீங்கள் பேசுவதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று நினைப்பதை விட, மற்றவர்கள் பேசுவதை நீங்கள் கவனமாகக் கேட்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஜெயிக்க முடியும் என்கிற கருத்தை தெளிவாக எடுத்துச் சொல்கிறது இந்த கருத்தாக்கம்.

வெற்றி பெற்ற பிசினஸ்மேன்களை உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால், மற்றவர்கள் பேசும்போது அதை உன்னிப்பாக கேட்கிற பழக்கம் அவர்களிடம் இருக்கும். மற்றவர்கள் பேசுவதை அவர்கள் கேட்பார்களே ஒழிய, சட்டென இடைமறித்துப் பேசிவிட மாட்டார்கள். ‘நீ பேசி நான் கேட்பதைவிட நான் பேசுவதை நீ கேள்’ என்று சொல்லும் அவசரக்கொடுக்கை மனோபாவம் அவர்களிடம் இருக்கவே இருக்காது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்