கமாடிட்டி சந்தையை வரைமுறைப்படுத்தும் செபி...

மீண்டும் நல்ல காலம் பிறக்கிறது!இரா.ரூபாவதி

மீண்டும் நல்ல காலம் பிறக்கப் போகிறது கமாடிட்டி சந்தைக்கு. கமாடிட்டி சந்தையில் பல்வேறு பிரச்னைகள் நிலவுவதால், அந்தச் சந்தையை ஒழுங்குப்படுத்த மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை கடந்த ஆண்டே அமைத்தது பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி.

இந்தக் குழு கடந்த வாரம் கூடியது. இந்தக் கூட்டத்தில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அந்த விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், கமாடிட்டி சந்தையில் மீண்டும் நல்ல காலம் பிறக்கும் என்கிறார்கள் கமாடிட்டி சந்தை நிபுணர்கள். அப்படி இந்தக் கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட்டது?

தற்போது கமாடிட்டி சந்தையில் நடக்கும் நிகழ்வுகளில் வெளிப்படைத்தன்மை கிடையாது. அதாவது, கமாடிட்டி சந்தையில் கட்டணங்கள் எவ்வளவு, சந்தை நடைமுறை என்ன, பொருட்கள் எங்கு சேமித்து வைக்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளிப்படையாக தெரியாதது பெரிய குறையாகவே உள்ளது. இந்தத் தகவல்கள் எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிய வேண்டும். இதற்கு வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வேண்டும்.

மார்க்கெட் ரிஸ்க்கை குறைப்பதன் மூலம் புதிய முதலீட்டாளர்களை கமாடிட்டி சந்தையில் மீண்டும் முதலீடு செய்ய வைக்க வேண்டும். அதாவது, இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கமாடிட்டி சந்தையில் முதலீடு செய்வதில்லை. இந்த நிறுவனங்கள் கமாடிட்டி சந்தையில் முதலீடு செய்யும்போது சந்தையின் நம்பகத்தன்மை அதிகரிக்கும் வாய்ப்பு உயரும்.  வர்த்தகப் பரிவர்த்தனையும் அதிகரிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்