வங்கிகள் மீதுள்ள நம்பிக்கையைத் தகர்த்து விடாதீர்கள்!

ஹலோ வாசகர்களே..!

வங்கிகள் மீதுள்ள நம்பிக்கையைத் தகர்த்து விடாதீர்கள்!

தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனியார் நிறுவனத்திடமிருந்து கடன் பெற்று, ஒரு டிராக்டரை வாங்கினார். இந்த டிராக்டரை வாங்கியதற்கான கடன் பணத்தை இரண்டு தவணையாக அவர் கட்டவில்லை. இதற்காக  போலீஸ் உதவியுடன் அவர் வைத்திருந்த டிராக்டரை பறித்து, அந்த விவசாயியை அடித்து உதைத்திருக்கிறது கடன் தந்த நிறுவனம். 

சில லட்ச ரூபாய் கடன் வாங்கிய விவசாயி அடித்து துன்புறுத்தப்பட, பொதுத் துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய விஜய் மல்லையா பட்டப்பகலில்  டெல்லி விமான நிலையம் மூலமாக எந்தவித சேதாரமும் இல்லாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கிறார். ஏழையானவர் கடனை திரும்ப செலுத்தாவிட்டால் அடி, உதை; பணக்காரர் கடனை திரும்ப செலுத்தாவிட்டால் ராஜ மரியாதை. விஜய் மல்லையா விவகாரம் இந்த உண்மையைத்தான் நமக்கு எடுத்துச் சொல்கிறதா?

யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தவுடனே தனக்குக் கிடைக்கும் ரூ.500 கோடியை எடுத்துக் கொண்டு இங்கிலாந்துக்குப் போய்விடப் போவதாக அறிவித்தார் மல்லையா. அவரை வெளிநாட்டுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என  வங்கிகள், சிபிஐ உள்பட பல்வேறு அமைப்புகளிடம் புகார் தந்தபின்பும், உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? அரசுக்குத் தெரியாமல் விமான நிலையம் வழியாக ஒரு ஈ, எறும்புகூட செல்ல முடியாதபோது, மல்லையா எப்படி வெளிநாட்டுக்குப் போனார்? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்