மியூச்சுவல் ஃபண்ட்: 10 ஆண்டுகளில் அள்ளித் தந்த எஸ்ஐபி!

பா.பத்மநாபன், இயக்குநர், ஃபார்ச்சூன் பிளானர்ஸ் இன்வெஸ்ட்மென்ட் (பி) லிட்

மியூச்சுவல் ஃபண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்கிற கேள்வியை அதில் புதிதாக முதலீடு செய்யும் பலரும் தவறாமல் கேட்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்டில் ஒரே முறை முதலீடு செய்திருந்தாலும், எஸ்ஐபி முறையில் முதலீடு செய்திருந்தாலும் லாபம்தான்.

மியூச்சுவல் ஃபண்டில் கடந்த பத்து  ஆண்டுகளில் நல்ல லாபம் கிடைத்திருக்கிறது என்பதற்கான ஆதாரம் இதோ...

மும்பை பங்குச் சந்தை குறியீடு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 9/3/06 அன்று 10,573 புள்ளிகளாக இருந்தது. அது கடந்த 8/3/16 அன்று முடிவில் 24,659 புள்ளிகளாக உயர்ந் திருக்கிறது. இது ஏறக்குறைய 133.23% உயர்வு. ஒருவர் ரூ.1,20,000-யை ஒரே முறையாக (Lump sum) அப்போது முதலீடு செய்திருந்தால், அவருக்கு ரூ.2,79,941 கிடைத்திருக்கும். இது கூட்டு வட்டி அடிப்படையில் பார்த்தால் 8.84% உயர்வு.

ஆனால், அவர் ஒவ்வொரு மாதமும் எஸ்ஐபி முறையில் ரூ.1,000 வீதம் முதலீடு செய்து, அதே பணம் (ரூ.2,79,941) கிடைக்க வேண்டுமானால், அவரது முதலீடு கூட்டு வட்டி அடிப்படை யில் 15.07% வளர்ந்திருக்கும்.

ஆக, ஒரே முறை முதலீடு செய்தால், 8.84% வருமானம்; அதுவே எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தால், 15.07 சதவிகித  வருமானத்துக்கு சமம். பணம் உள்ளவர்கள் சந்தை சரிந்த சமயத்தில் ஒரே முறை முதலீடு செய்யலாம்; அது இல்லாதவர்கள் எஸ்ஐபி முறையைத் தேர்வு செய்வது நல்லது.

உதாரணமாக, ஒருவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு யூடிஐ மல்டி நேஷனல் கார்ப்பரேஷன் ஃபண்ட் (MNC Fund) திட்டத்தில் ஒரேமுறையில் 1,20,000 ரூபாயை முதலீடு செய்திருந்தால், அவருக்கு ரூ.4,64,767 கிடைத்திருக்கும். அதாவது, 14.5% கூட்டு வட்டியில் அவர் முதலீடு வளர்ந்திருக்கும்.  அதையே அவர் எஸ்ஐபி முறையில் ரூ.1,000 முதலீடு செய்திருந்தால், அவருக்குக் கிடைப்பது ரூ.3,23,443. இது கூட்டு வட்டியில் 17.39% வளர்ச்சி. ஆனால், அவருக்கு எஸ்ஐபி முறையில் ரூ.4,64,767 கிடைக்கவேண்டுமானால், அவருக்கு 22.97% கூட்டு வட்டி கிடைத்திருக்கவேண்டும். ஒரே முறையில் முதலீடு செய்யப்படும் முதலீட்டுக்கு 14.5% வளர்ச்சி எனில், எஸ்ஐபி முறையில் 22.97 சதவிகித லாப வளர்ச்சிக்கு சமம்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் பலருக்கு மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் பற்றியே கவலைப்படுகிறார்கள். ஆனால், பெரும்பாலான முதலீடுகள் அந்தக் குறியீட்டில் முதலீடு செய்யப்படுவதில்லை. சென்செக்ஸ் தந்த வருமானத்தை விட மியூச்சுவல் ஃபண்ட் நமக்கு எப்போதும் அதிக வருமானத்தையே தருகிறது.  (பார்க்க  பின்பக்கத்தில் உள்ள அட்டவணை)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்