எஃப் அண்ட் ஓ சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதா?

கேள்வி - பதில்

?எஃப் அண்ட் ஓ-வில் சிறிய முதலீட்டாளர்கள் டிரேடிங் செய்யலாமா? எஃப் அண்ட் ஓ டிரேடிங்கில் ரிஸ்க் அதிகமா?

@ - கோபால்,

 தி.ரா. அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

“எஃப் அண்ட் ஓ வியாபாரத்தில் சிறு முதலீட்டாளர்கள் ஈடுபடுவதைத் தவிர்க்கும் விதமாக, அக்டோபர் 2015, முதல் ஒரு கான்ட்ராக்ட்டின் குறைந்தபட்ச மதிப்பை ரூ.2,00,000-லிருந்து ரூ.5,00,000-ஆக செபி  உயர்த்தியுள்ளது. இதனால் நிறுவனப் பங்கில் முதலீடு செய்ய இதற்குமுன் சுமார் ரூ.30,000 மார்ஜின் தொகை தேவைப்பட்டால், அக்டோபர் 2015-க்குப் பிறகு ரூ.75,000 கட்டி வியாபாரம் செய்யவேண்டும்.

மேலும், இப்போது லாட் அளவு அதிகபடுத்தப்பட்டுள்ளதால், அதிக ரிஸ்க் மற்றும் ரிவார்ட் உள்ள இடமாக உள்ளது. அதாவது லாபமும், நஷ்டமும் அதிகமாக இருக்கும். அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத சிறுமுதலீட்டாளர்கள் இதில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்