2016-17 பட்ஜெட் எதிரொலி: ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை!

ஜெ.சரவணன்

டந்த பல மாதங்களாகவே இந்திய ஏற்றுமதி தொடர்ந்து இறக்கத்தில் இருப்பதால், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மத்திய அரசு பல சலுகைகளை அளிக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தனர் பலர்.

ஆனால், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கள் எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறாமல் ஏமாற்றம் தருவதாகவே அமைந்து விட்டதாக பல ஏற்றுமதியாளர்கள் மனம் குமுறுகின்றனர்.

நிதி ஒதுக்கீடு குறைப்பு!

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுபவை விவசாயப் பொருட்கள்தான். விவசாயப் பொருட்களுக்கான புரமோஷனல் கவுன்சிலான அபெடா-வுக்கு (APEDA) ஒவ்வொரு நிதி ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், இந்த பட்ஜெட்டில் கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டதை விடவும் 28% குறைவாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் மத்திய நிதி அமைச்சர். 

2015-16 -ம் நிதி ஆண்டில் அபெடா ஏற்றுமதி புரமோஷனல் கவுன்சிலுக்கு ரூ.135 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், 2016 -17-ம் நிதி ஆண்டில் ரூ.81 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அபெடா மட்டுமல்ல, காபி போர்டு, ரப்பர் போர்டு மற்றும் ஸ்பைசஸ் போர்டு போன்ற வற்றுக்கும் கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுமதியாளர்களையும் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்புகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்