பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டம்: ஒரு ரூபாய்கூட இல்லாத 23 லட்சம் வங்கிக் கணக்குகள்!

சோ.கார்த்திகேயன்

வீடு தோறும் போஸ்டர் ஒட்டாத குறையாக விளம்பரம் செய்யப்பட்ட மத்திய அரசின் ஜன் தன் யோஜனா திட்டத்தில், தமிழகத்தில் 23 லட்சத்துக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் ஒரு ரூபாய்கூட இல்லாமல் ஜூரோ பேலன்ஸில் இருக்கிறது.

ஜன் தன் யோஜனா!

வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருக்கும் வகையில் தொடங்கப்பட்டதே ‘பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா’ என்னும் மாபெரும் திட்டம். இந்தத் திட்டத்தைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி 15 ஆகஸ்டு, 2014 அன்று சுதந்திர தின உரையில் அறிவித்து,  அதன்பின் 28 ஆகஸ்டு 2014 அன்று டில்லியில் தொடங்கி வைத்தார்.

ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ், வங்கிக் கணக்கு தொடங்குபவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்துக் காப்பீடு அளிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளையும், ஓய்வூதியங்களையும் இந்த வங்கிக் கணக்கு மூலமே பெற்றுக்கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்