ஷேர்லக்: மதில் மேல் பூனையாக மார்க்கெட்!

‘‘பங்குனி மாதம்கூட பிறக்கவில்லை. அதற்குள் வெயில் மண்டையைப் பிளக்கிறதே!’’ என்றபடி தனது தொப்பியை  எடுத்து நம் டேபிளில் வைத்தார் ஷேர்லக். அவருக்கு ஜில்லென்று மேங்கோ மில்க் ஷேக் கொடுத்தோம். மில்க் ஷேக்கை உறிஞ்சியபடியே நம்முடன் பேசத் தொடங்கினார்.

‘‘நிஃப்டி 7500 என்கிற புள்ளிகளுக்கு மேலே ஏற முடியாமலும் கீழே இறங்க முடியாமலும் தவிக்கிறது. நியூஸிலாந்தில்  வட்டி குறைப்பு, இசிபி வட்டி குறைப்பு என வெளிநாட்டில் நடந்த சில நிகழ்வுகள் நம் சந்தை சரிவதற்கு முட்டுக் கொடுத்து நின்றன. இனி அடுத்து பெரிய அளவில் சந்தை ஏற்றம் பெற வேண்டுமெனில், நமது மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும்.

ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் எதிர்பார்த்தபடி சிக்கனமாக பட்ஜெட்டைப் போட்டுவிட்டோம். இனியாவது அவர் வட்டி விகிதத்தைக் குறைக்கிறாரா என்று பார்ப்போம் என நினைத்தது மத்திய அரசாங்கம். ஆனால், பட்ஜெட்டுக்கு முன்பு தினம்  ஒரு கூட்டத்தில் பேசிய ஆர்பிஐ கவர்னர் இப்போதெல்லாம் எங்கும் பேசுவதில்லை. அவர் வெளியே வந்து பேசினால், வட்டி குறைப்பு பற்றி பதில் சொல்ல வேண்டியிருக்கும். எனவே, வாய் மூடி மெளனம் காக்கிறார். அவர் வட்டியைக் குறைப்பாரா, மாட்டாரா என்பதை யாராலும் தெளிவாக சொல்ல முடியவில்லை. மத்திய அரசின் பட்ஜெட்டை மட்டும் வைத்து வட்டியைக் குறைப்பது என்கிற முடிவுக்கு வரும் நிலையில் அவர் இல்லை. சர்வதேச அளவில் நம் பணப்புழக்கத்தை பாதிக்கும்படியான நடவடிக்கைகள்,  முக்கியமாக அமெரிக்க அரசின் வட்டி குறைப்பு நடவடிக்கைகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு என பல விஷயங்களை கூர்ந்து கவனித்து வருகிறார். இதை எல்லாம் நிதானமாக பார்த்தபின்பே அவர் முடிவெடுப்பார் என்று தெரிகிறது. அந்த முடிவு வெளியாகும் வரை சந்தை இப்படி மதில் மேல் பூனையாகவே இருக்க வாய்ப்புண்டு. இப்போதுள்ள நிலையில், சந்தை கீழே போனாலும் வருத்தப்படக் கூடாது. நல்ல பங்குகளை தயங்காமல் வாங்கிப் போட வேண்டும்’’ என்று உறுதியாக சொன்னார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்