பிசினஸ் சீக்ரெட்ஸ் - 36

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தொழில் முனைவோர்களுக்குத் துணை நிற்கும் பிராக்டிகல் தொடர்‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் மூன்று!

ரு நிறுவனம் வெற்றிகரமாக திகழ அவசியம் இருக்க வேண்டியது ‘சினர்ஜி’.  ஸ்டீவன் கோவி தனது ‘7 Habits of Highly Effective People’ என்னும் புத்தகத்தில்  ‘சினர்ஜைஸ்’ என்கிற தலைப்பில் இது பற்றி விரிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். 

‘சினர்ஜி’ என்றால்...?

1 + 1 = 2 என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், ‘சினர்ஜி’ சரியாக செயல்பட்டால், 1 + 1 = 2 அல்ல, 3 ஆகும். ரமேஷுக்கு என்று சில திறமைகள் உண்டு. சுரேஷுக்கு என்று வேறு சில திறமைகள் உண்டு. இந்த இரண்டு பேருக்கும் ‘சினர்ஜி’ சரியாக செயல்படும் பட்சத்தில், அதன் மூலம் கிடைக்கும் விளைவு இரண்டு மடங்காக இருக்காது; மூன்று மடங்காக இருக்கும் என்பதே ‘சினர்ஜி’யின் தத்துவம்.

இரண்டு பேர் சரியாக செயல்படும்போது ‘கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிடுச்சு’ என்போம். அதுமாதிரிதான் இந்த ‘சினர்ஜி’. நாம் தினம் தினம் பல விநியோகஸ்தர்களுடன், மூலப்பொருட்களை நமக்களிக்கும் பல வியாபாரி களுடன் பிசினஸ் செய்வோம்.  இவர்களில் சிலருடன் சேர்ந்து வியாபாரம் செய்யும்போது ‘சினர்ஜி’ சரியாக அமைந்து, வியாபாரம் மிகப் பிரமாதமாக அமையும். இதை நான் பல சமயங்களில் எனது வாழ்க்கையில் நேரடியாகவே உணர்ந்திருக்கிறேன்.     எத்தனையோ விளம்பர நிறுவனங்களுடன் சேர்ந்து எங்கள் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சென்றிருக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்