இன்ஷூரன்ஸ் ஆயுள் காப்பீடு... பெண்களுக்கு பிரீமியம் குறையுமா?

கேள்வி - பதில்

இன்ஷூரன்ஸ் ஆயுள் காப்பீடு பிரீமியத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேறுபாடு இருக்கிறதா?

செந்தில்குமார்,

ரமேஷ் பட், நிதி ஆலோசகர்.

“ஆயுள் காப்பீடு பிரீமியத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் இந்த வேறுபாட்டை காண முடியும். ஆயுள் காப்பீட்டு பிரீமியம் அட்டவணையைப் பார்த்தால், ஆண்களைவிட பெண்களுக்கு பிரீமியம் சிறிது குறைவாக இருப்பதைப் பார்க்கலாம்.

காரணம், ஆண்களை விட பெண்கள் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்வதேயாகும். பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி-ல் இந்த வேறுபாடு இல்லை. புகை பிடிப்பவர் மற்றும் புகை பிடிக்காதவர் என்கிற வேறுபாட்டின் காரணமாகவும் பிரீமியம் குறைவாக இருக்கலாம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்