சட்டமாகும் ரியல் எஸ்டேட் மசோதா... வீடு விலை குறையுமா?

மு.சா.கெளதமன்

னிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று வீடு. இன்றைக்கு ஒருவர் தனது வாழ்க்கையில் ஒரே ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்வதே நினைத்துப் பார்க்க முடியாத விஷயமாக இருக்கிறது. காரணம், வீடுகளின் விலை கண்டபடி உயர்ந்திருப்பதுதான்.

தவிர, ரியல் எஸ்டேட் துறையில் மோசடிகள் அதிக அளவில் நடக்கத் தொடங்கி விட்டன. இந்த இரண்டு காரணங்களினால் பலருக்கும் வீடு வாங்குவது பதபதைக்கும் விஷயமாக மாறியிருக்கிறது.

வெளுத்துப் போன வெளிப்படை!

ஜேஎல்எல் என்கிற ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் 2014-ல் வெளியிட்ட உலக ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீட்டில் (Global Real estate Transparency Index) டயர் 1 நகரங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்தியாவுக்கு 40-வது இடம் கிடைத்திருக்கிறது. இதுவே டயர் 2 நகரங்களுக்கு 42-வது இடம் கிடைத்திருக்கிறது. சுருக்கமாக, இந்திய ரியல் எஸ்டேட் அரைகுறையான வெளிப்படைத் தன்மை (Semi Transparency)  கொண்டது என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்