ஐபிஓ வரும் பி.எஸ்.இ. முதலீட்டாளர்களுக்கு சாதகமா?

வி.நாகப்பன், பங்குச் சந்தை நிபுணர்

மும்பை பங்குச் சந்தை, தனது நிறுவனப் பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிடவும், பங்குச் சந்தையில் பட்டியலிடவும் சமீபத்தில் கொள்கை அளவில் அனுமதி அளித்திருக்கிறது பங்குச் சந்தையை நெறிபடுத்தும் அமைப்பான செபி.

பொதுவாக, தொழில் நிறுவனங்கள் அவற்றின் பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதையும், அந்தப் பங்குகளைப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதையும் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் பங்குச் சந்தையின் பங்குகள், சந்தையில் பட்டியலிட்டு வர்த்தகமாகப் போவது இதுவே முதல் முறை. 

ஆரம்ப காலத்தில், பங்குச் சந்தைகள் எல்லாமே லாப நோக்கில் துவங்கப்பட்டவை அல்ல; அதனால்தான் அவை பங்குகளை வெளியிடவில்லை. உறுப்பினர்களாகிய புரோக்கர் களால் நிர்வகிக்கப்பட்டு, அவர்களாலேயே நெறிமுறைப் படுத்தப்பட்டும் வந்தது.  இதில் உள்ள நடைமுறைச் சிக்கல் என்னவென்றால், யாரை நெறிமுறைப்படுத்த வேண்டுமோ, அவரே அதைத் தீர்மானிக்கும் உயரத்தில் அமர்ந்திருக்கும் சூழலும் உருவானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்