வேலைக்குப் போகாமல் மாதம் 1 லட்சம் ரூபாய் வேண்டும்!

ஃபைனான்ஷியல் பிளானிங்கா.முத்துசூரியா

‘‘பாஸ்... எனக்கு காலையில் வேலைக்குப் போய், ராத்திரிக்கு வீட்டுக்கு வந்து... ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருந்து... 58 வயசு வரைக்கும் போராடும் இந்த சராசரி லைஃப் வேண்டாம். அடுத்த மூணு வருஷத்துல எனக்கு வேலையே பார்க்காம ஒரு லட்சம் வருமானம் வரணும்.

அதுக்கு நான் என்ன செய்ய ணும்” என்ற கலைவேந்தனை கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் அதிர்ச்சியோடு, ‘‘என்ன சொல்ல வர்றீங்க சார்?’’ என்றோம்.  ‘‘விளக்கமா சொல்றேன், கேளுங்க’’ என அவரே சொல்ல ஆரம்பித்தார்.

‘‘என் சொந்த ஊர் உடுமலைப் பேட்டை. எனக்கு 25 வயசு ஆகுது. அப்பா, அம்மா உடுமலைப்பேட்டையில தான் இருக்காங்க. சமீபத்தில எனக்கு திருமணம் ஆச்சு.  நானும், என் மனைவி சுகன்யாவும் சென்னையில் எம்என்சி கம்பெனியில வேலை பார்க்குறோம். இரண்டு பேருக்கும் சேர்த்து பிடித்தம் போக 60,000 ரூபாய் சம்பளம் வருது. மொத்த செலவுகளும் சேர்த்து 41,300 ரூபாய் ஆகிறது. 18,700 ரூபாய் மீதமாகுது. பி.எஃப் தொகை ஒவ்வொருவருக்கும் 1,350 ரூபாய் கடந்த மூணு வருஷமா பிடிக்கிறாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்