கம்பெனி ஸ்கேன்: வாடெக் வாபெக் லிமிடெட் (NSE SYMBOL: WABAG)

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் ‘வாடெக் வாபெக் லிமிடெட்’ (NSE SYMBOL: WABAG எனும் நிறுவனம்  ஆகும். 

1924-ம் ஆண்டில் வாபெக் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஜெர்மானிய நிறுவனம் 1999-ம் ஆண்டு வா டெக்னாலஜீஸ் எனும் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு வாடெக் வாபெக் லிமிடெட் என்ற நிறுவனமாக உருவெடுத்தது.

தண்ணீர் சுத்திகரிப்பு (ட்ரீட்மென்ட்) துறையில் தன்னிகரில்லாத இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம். தண்ணீர் சுத்திகரிப்பு துறையில் 90 வருட அனுபவத்தை கொண்டிருக்கும் இந்த நிறுவனம், சுத்திகரிப்புக்கு தேவையான பிளான்ட்டுகளை  செயல்திட்ட வடிவமைத்தல், கட்டுதல், காத்தல், செயல்படுத்தல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகளை குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புக்காக செய்து வருகிறது.

குடி நீர் சுத்திகரிப்பு, தொழில் நிறுவனங்களின் உபயோகத்துக்கான நீர் சுத்திகரிப்பு, உப்பு அகற்றுதல், நகராட்சிகளுக்கான கழிவு நீர் சுத்திகரிப்பு, தொழில் நிறுவனங்களின் கழிவு நீர் சுத்திகரிப்பு போன்றவற்றிற்கான ப்ராசஸ் உபகரணங்கள், கட்டுமானங்கள் மற்றும் தொழில்  நுட்பத்தைத்  தரும் தொழிலில் உலகின் மிகப் பெரிய நிறுவனங் களில் ஒன்றாக  இருக்கிறது இந்த நிறுவனம். 

புதுப்புது தொழில்நுட்பத் துடன்  வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப வடிவமைக்கப் பட்ட பிளான்ட்டுகளை வழங்கிவரும் இந்த நிறுவனம், கழிவு நீரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் வடிகால்களில் வெளியேற்றுதல் மற்றும் குடிநீரை மிகவும் தரம் வாய்ந்ததாக சுத்திகரித்தல் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்