பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்..!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

ண்டெக்ஸ் கடந்த வார ஆரம்பத்தில் சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்றத்தை தொடர்ந்து, வாரத்தில் பெரிய மாற்றம் இருக்கும் என்கிற  எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்யாகிவிட்டது. நிஃப்டி கடந்த வாரம் அதிகபட்சமாக 170 புள்ளிகள் என்கிற குறைந்த அளவிலான புள்ளிகளுக்குள்ளேயே வாரம் முழுவதும் வர்த்தகமானது.

தினசரி வர்த்தகத்தில் விலை ஏற்ற இறக்கம் தொடர்ந்து அதிகமாகவே இருந்தது. ஒரே நாளில் 100 புள்ளிகளுக்கு மேல் விலை ஏற்ற இறக்கம் இருந்ததால் டே டிரேடர்கள் மற்றும் வார டிரேடர்கள் வர்த்தகம் செய்ய திணறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 29ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டுக்குப் பின் சந்தை சற்று ஏற்றத்திலேயே இருக்கிறது என்பதை ஒரு பாசிட்டிவான விஷயமாகவும், ஆறுதலான விஷயமாகவும் எடுத்துக் கொள்ளலாம். தற்போது சந்தையை பார்க்கும்போது, ஏதாவது ஒரு நல்ல செய்தி வந்தால் சந்தை தன் ரேஞ்சை உடைத்துக் கொண்டே வர்த்தக மாகும் என்று எதிர்பார்க்கலாம். அந்த நல்ல செய்தி 2016 ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் திட்டமிடப்பட்டிருக்கும் ஆர்பிஐ கூட்டத்தில் வட்டிவிகித மாற்றம் பற்றிய செய்தியாக இருக்கலாம். அல்லது உலக அளவிலும், வெளிநாடுகளிலிருந்து நம் சந்தையின் விலையை அதிகரிக்கும் செய்திகளாக இருக்கலாம்.  இதை எல்லாம் விட கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 40 டாலருக்கு உயர்ந்திருக்கிறது. அதோடு நடந்து முடிந்த அமெரிக்க ஃபெடரல் வங்கி கூட்டத்தில் இந்த ஆண்டுக்கு இரண்டு வட்டி விகித உயர்வு மட்டுமே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு ஐரோப்பாவின் பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. எனவே, உலகம் முழுக்க  அமைதி நிலவும். இந்த செய்திகள் நம் இந்திய சந்தை, ரேஞ்சுகளை உடைத்து வர்த்தகமாகும் காரணிகளாக விரைவில் அமையலாம்.

கடந்த இரண்டு வாரங்களில் வங்கி நிஃப்டி மிக நன்றாகவே வர்த்தகமாகி இருக்கிறது. ஏப்ரல் மாத ஆர்பிஐ கூட்ட முடிவால் இன்னும் நன்றாக செயல்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆர்பிஐ வட்டி விகித அறிவிப்பு வரை வங்கிப் பங்குகள் அல்லது வங்கி இண்டெக்ஸில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது. இதனால் இறக்கங்கள் ஏற்பட்டால் அவை வாங்கும் வாய்ப்பாக அமையும். 

நிஃப்டி ஃப்யூச்சர்ஸின்  உடனடி இலக்காக 7625 என்கிற புள்ளியே தொடர்கிறது, அதே நேரத்தில் வங்கி நிஃப்டியின் உடனடி இலக்காக 16100 என்கிற  புள்ளியை எடுத்துக் கொள்ளலாம்.  நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் 7400 என்கிற சப்போர்ட் நிலையும் நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் 15200 என்கிற சப்போர்ட் நிலையும் காணப்படுகிறது. இந்த சப்போர்ட் லெவல்களையே ஸ்டாப் லாஸாக, லாங் எடுக்கும் டிரேடர்களும், எடுத்த டிரேடர்களும் வைத்துக் கொள்ளலாம்.

ஏபிபி இந்தியா (ABB):

தற்போதைய விலை ரூ.1156.05

வாங்கவும்


கடந்த சில வாரங்களுக்கு முன்  இறக்கம் கண்டு 963 ரூபாய்க்கு (21 ஜனவரி 2016) வர்த்தகமாகி வந்த இந்த நிறுவன பங்குகள் தற்போது மீண்டும் விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. விலை இறக்கத்துக்குப் பிறகு  பிப்ரவரி மாதத்திலேயே பெரிய அளவில் விலை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. பிப்ரவரியில் தொடங்கிய விலை ஏற்றம் தற்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஏற்றம் சுமார் 1,275 ரூபாய் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  1,100 ரூபாயை ஸ்டாப்லாஸாக வைத்துக் கொண்டு முதலீடு செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்