டிரேடர்களே உஷார் - 3

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

சுந்தரம் ஒரு இரும்பு ஸ்கிராப் கான்ட்ராக்டர். பெரிய தொழிற்சாலைகளில் வீணாகும் இரும்பு ஸ்கிராப்புகளை ஏலத்தில் எடுப்பார். அப்புறம் அதை உருக்கி நல்ல லாபம் வைத்து விற்பார்.

வருடத்துக்கு ரூ. 6 – 7 கோடி டேர்ன் ஓவர் செய்வார். 50 - 60 லட்சம் ரூபாய் லாபம் சம்பாதிப்பார். அவருக்கு ஒரு மனைவி, இரண்டு பிள்ளைகள். . நல்ல குடும்பம், நல்ல வருமானம், நிம்மதியான வாழ்க்கை.

சுந்தரத்துக்கு தர்மர் என்ற ஒரு நண்பர் உண்டு. மாசம் ஒரு முறை ஒரு கிளப்பில் சந்திப்பார்கள். அப்போது, சுந்தரம், தர்மரிடம் மனம் திறந்து பேசுவார். அப்படி ஒருமுறை பேசும்போது, ‘‘தர்மா, இப்பல்லாம் ஸ்கிராப் பிசினஸ் பண்றதில் போட்டி ஜாஸ்தி ஆயிடிச்சி. கம்பெனிங்க வேற பணத்தைக் குடுக்க மாட்டேங்கிறாங்க. சமயத்தில ஒரு கோடி, இரண்டு கோடின்னு லாக் ஆயிடுது. வட்டி கட்டி சமாளிக்க முடியல’’ என்று புலம்பினார். ‘‘அப்படியா...?’’ என்று ஆச்சரியப்பட்டார் தர்மர். அவருக்கு உள்ளுக்குள் சந்தோஷம்.

‘‘சரி, உனக்கு ஒரு ஐடியா சொல்றேன். ஷேர் மார்க்கெட்ல டிரேட் பண்றியா?’’ என்று கேட்டார். ‘‘ஷேர் மார்க்கெட்டா! அதை பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாதே.?’’ என்று பதறினார் சுந்தரம். ‘‘அதை பத்தி நீ கவலைப்படாதே, நான் கத்து தர்றேன்’’ என்று தெம்பாக சொன்ன தர்மரைப் பத்தி ஒரு சில வார்த்தைகள்.

தர்மருக்கு இதுதான் வேலை என்று கிடையாது. அப்பப்ப வியாபாரம் என்ற பெயரில், ஏதாவது பொருளை வாங்கி விற்பார். திருப்பூர் போய் பனியன், டவுசர் வாங்கி பெங்களூர், ஹைதராபாத் அப்படின்னு சில பார்ட்டிக்கு கொடுப்பார். அப்புறம் அதை விட்டு, ஈரோடு லுங்கி, டவல்னு வாங்கி சப்ளை பண்ணுவார். ஒரு சமயம் ஒன்றுமே செய்ய மாட்டார். கையில காசு வந்தா, ஷேர் மார்க்கெட்டில் டிரேட் செய்வார். அது காலியானால், காசு வைத்திருக்கிற யாரிடமாவது ஒட்டிக்கொண்டு ஐடியா தருவார். லாபம் வந்தா, சார் எனக்கு கொஞ்சம் கமிஷன் கொடுங்கன்னு கேட்டு வாங்கிக் கொள்வார். அது மாதிரியான தர்மரின் வலையில் லேட்டஸ்ட்-ஆக சிக்கிய மீன் சுந்தரம்.

ஷேர் மார்க்கெட்டின் மூலைமுடுக்குகளை சுந்தரத்துக்கு விளக்க ஆரம்பித்தார் தர்மர். ‘‘ஷேர் மார்க்கெட்ல நிஃப்டி, பேங்க் நிஃப்டி, அப்புறம் ரிலையன்ஸ், ஸ்டேட் பேங்க் எல்லாத்துலயும் நான் டிரேட் பண்ணுவேன், தெரியுமா?’’ என்று தர்மர் தனது பேக்ரவுண்ட்டை எடுத்துவிட, ‘‘தர்மா, அப்ப, எனக்கும் கொஞ்சம் சொல்லித் தாயேன்’’ என்று கெஞ்சினார் சுந்தரம்.

தர்மரும், சுந்தரத்துக்கு ஒரு டீமேட், டிரேடிங் அக்கவுன்ட்டை ஆரம்பித்துக் கொடுத்தார். ‘‘பணம் எவ்வளவு கட்டணும் தர்மா?’’ என்று கேட்டவரிடம், ‘‘இப்போதைக்கு ஒரு லட்சம் போடு.  அப்புறம் போகப் போக  பாத்துக்கலாம்’’ என்றார்.

சுந்தரமும் ஒரு லட்சம் ரூபாய் போட்டு டிரேடிங்கை ஆரம்பித்தார். ‘‘முதல்ல எதில டிரேட் பண்ணலாம் தர்மா?’’ என்று கேட்டார் சுந்தரம். ‘‘இப்ப பேங்க் நிஃப்டிதான் நல்லா போவுது. அதில ஆரம்பிப்போம்’’ என்றார் தர்மர்.

‘‘பேங்க் நிஃப்டின்னா என்ன தர்மா?’’ நல்லபிள்ளையாகக் கேட்டார் சுந்தரம்.

‘‘அதெல்லாம் உனக்கு எதுக்கு, லாபம் எப்படி பண்றதுன்னு மட்டும் பாரு.  நானும்தான் ஐந்து வருஷமா பேங்க் நிஃப்டியில டிரேட் பண்றேன். ஏறும்னு தோணுச்சினா வாங்குவேன், லாபம் வந்தா வித்துடுவேன். இறங்கும்னா ஷாட் அடிப்பேன், லாபம் வந்தா கவர் பண்ணுவேன்’’ என்றவுடன் சுந்தரத்துக்கு ஆச்சரியம். ‘‘என்னது, இறங்கினாலும் லாபம் சம்பாதிப்பியா? எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுப்பா’’ என்று பரபரத்தார் சுந்தரம்.

‘‘அவசரப்படாதே, நாளைக்கு ஒன்பது மணிக்கு நானே உன் வீட்டுக்கு வர்றேன். ரெடியா இரு. டிரேடிங்கை ஆரம்பிச்சிடலாம்’’ என்றார் தர்மர்.

திங்கள்கிழமை காலை, சுந்தரம் தன் வீட்ல, லேப் டாப்பை ஆன் பண்ணி தயாராக வைத்திருந்தார். சரியாக ஒன்பது மணிக்கு தர்மர் வந்தார்.சேரில் உட்கார்ந்து லேப் டாப்பை தன்பக்கம் இழுத்து வைத்துக்கொண்டார். லாக்கின் செய்தபின், ஸ்கிரீனில் பேங்க் நிஃப்டி விலை ஓட ஆரம்பித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்