கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

ஜெ.சரவணன்

கச்சா எண்ணெய்!

“கடந்த வாரத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தில் வர்த்தகமானது. தோஹாவில் நடைபெற்ற எண்ணெய் உற்பத்தி நாடுகள் மாநாட்டில் உற்பத்தியைக் குறைப்பதற்காக நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் அந்த மாநாட்டில் அதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் கச்சா எண்ணெய் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்க்கப்பட்டது போலவே கடந்த வாரம் திங்கள் கிழமை சர்வதேச கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 41 டாலருக்கு குறைந்து வர்த்தகமானது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டது. அதிகபட்சமாக 44 டாலரை தொட்ட பேரல் கச்சா எண்ணெய் விலை வார இறுதியில் 43.88 டாலராக முடிந்தது. 2016ம் ஆண்டில் இதுவரை நடந்த வார வர்த்தகத்தில் அதிகபட்ச விலையாக இது பதிவாகியுள்ளது. ஏறக்குறைய 8 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்