தேன்கூட்டில் கைவைத்தால் பாதிப்பு அரசாங்கத்துக்கே!

ஹலோ வாசகர்களே..!

க்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசாங்கம் எடுக்கும் சில நடவடிக்கைகளை சில சமயங்களில் மக்களே ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என்பதற்கு சிறந்ததொரு உதாரணம், கடந்த வாரத்தில் எம்ப்ளாயிஸ் பிராவிடெண்ட் ஃபண்ட் (EPF) என்று அழைக்கப்படுகிற ஊழியர் சேமநல நிதி தொடர்பாக மத்திய அரசாங்கம் கொண்டுவந்த புதிய உத்தரவும் அதனால் விளைந்த கலவரமும். பெங்களூரே கலகலத்துப் போகிற அளவுக்கு கலவரம் நடந்ததைத் தொடர்ந்து புதிய உத்தரவை நடைமுறைப்படுத்த மூன்று மாதம் ஒத்தி வைத்துள்ளது.

அரசு பென்ஷன் என்பதை எல்லா ஊழியர்களுக்கும் அளிக்க இயலாது என்பதால்தான் பி.எஃப். என்கிற நடைமுறையை நமது அரசாங்கம் கொண்டுவந்து அதனை தொடர்ந்து பின்பற்றி வருகிறது. ஆனால், பி.எஃப். பணத்தை தனியார் நிறுவன ஊழியர்கள் பலரும் நிறுவனம் மாறும்போதெல்லாம்  எடுத்துவிடுகின்றனர். இதனால் ஓய்வுக் காலத்தில் போதிய நிதி ஆதாரம் இல்லாமலே கஷ்டப்பட வேண்டிய நிலையில் வாழ்கின்றனர். இதை தடுக்கவே பி.எஃப். பணத்தை இடையில் எடுக்கக்கூடாது என்கிற புதிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது அரசு.

ஆனால், பி.எஃப். கணக்கில் இருக்கும் பணம் என் சொந்தப் பணம். அதை எடுத்துக் கொள்வது தங்கள்் உரிமை என்றுதான் பலரும் நினைக்கின்றனர். 40 வயதிலேயே வேலையை விட்டுவிடுகிறவர், 58 வயதுக்குப் பிறகுதான் பி.எஃப். பணத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்