சிறு சேமிப்புத் திட்டங்களில் என்னென்ன வரிச் சலுகை?

கேள்வி - பதில்

?சிறுசேமிப்புத் திட்டங்களில் என்னென்ன வரிச் சலுகைகள் இருக்கின்றன?

@சந்தோஷ்,


ச. ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்.

‘‘சிறு சேமிப்புத் திட்டங்கள்  சராசரி மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒன்றாகும். அதை ஊக்குவிக்கும் விதமாக வருமான வரிச் சட்டம் பின்வரும் திட்டங்களில் முதலீடு செய்யும்போது பிரிவு 80சி-யின் கீழ் ரூ.1.5 லட்சத்துக்கு வரி விலக்கு அல்லது கழிவு அளிக்கிறது. பொது வைப்பு நிதி (public provident fund), தேசிய சேமிப்புத் திட்டம் (National savings certificate), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior citizen savings scheme), சுகன்ய சம்ரிதி திட்டம் (பெண் குழந்தைகளுக்கானத் திட்டம்).’’

? என் வயது 41. கடந்த ஏழு வருடங்களாக நியூ இந்தியா அஷ்யூரன்ஸில் ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை ரூ.5 லட்சத்துக்கு வைத்திருக்கிறேன். நான் இந்த பாலிசியை ரூ.8 லட்சத்துக்கு அதிகப்படுத்தலாம் என்று இருக்கிறேன். இதே நிறுவனத்தில் அதிகப்படுத் தலாமா அல்லது வேறு நிறுவனத்துக்கு மாறலாமா? ரெஸ்டோர், நோ க்ளெய்ம் ஃபெசிலிட்டி, மூன்று வருடத்துக்கு ஒருமுறை ஹெல்த் செக் அப் செய்யும் வசதி உள்ள பாலிசி ஏதாவது இருந்தால் பரிந்துரை செய்யுங்கள்!

@ முருகேஷ்,


எஸ்.ஸ்ரீதரன், தலைமை நிதி ஆலோசகர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.

“நியூ இந்தியா பாலிசியில் நீங்கள் கேட்டிருக்கும் ரெஸ்டோர் மற்றும் ஹெல்த் செக் அப் வசதிகள் இல்லை. ஆகவே, பாலிசி முடிவதற்கு 45 நாட்களுக்குமுன் பாலிசியை ஒரு புது நிறுவனத்துக்கு மாற்றிக்கொண்டால், பழைய பாலிசியின் அனைத்து வசதிகளும் தொடர்வதுடன் பாலிசியின் காப்பீட்டுத் தொகையையும் அதிகரித்துக் கொள்ள முடியும். நீங்கள் ரெலிகேர் ஹெல்த் பாலிசியோ அல்லது அப்போலோ முனிச்சின் ஆப்டிமா ரெஸ்டோர் பாலிசியோ எடுத்துக்கொள்வது நல்லது.”

?   நான் வெளிநாட்டில் வசித்து வருகிறேன். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். அதற்கு யாரை அணுக வேண்டும்?

@  கதிரவன்,

த.சற்குணன், நிதி ஆலோசகர், சென்னை

“நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்கள் என்று குறிப்பிடவில்லை. முதலில் நீங்கள் கேஒய்சி எடுக்க வேண்டும். கேஒய்சி எடுப்பதற்கு பான் கார்டின் நகல், பாஸ்போர்ட்டின் நகல், நீங்கள் வெளிநாட்டில் தங்கியிருக்கும் இருப்பிடத்தின் முகவரி, பாஸ்போர்ட் அளவு ஒரு புகைப்படம் தேவைப்படும். அதன்பிறகு  என்ஆர்இ அல்லது என்ஆர்ஒ கணக்கைப் பயன்படுத்தி முதலீட்டைத் தொடங்கலாம். ஒருவேளை நீங்கள் அமெரிக்கா அல்லது கனடாவில் வசிப்பவராக இருந்தால், எல் அண்ட் டி  மற்றும் சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்