கேட்ஜெட்ஸ்

செ.கிஸோர் பிரசாத் கிரண்

அசூஸ் ஜென்புக் UX303UB (Asus Zenbook UX303UB)

குறைந்த விலை, அழகான டிசைன், சிறந்த தொழில்நுட்பம் – இதுதான் அசூஸ் நிறுவனத்தின் கோட்பாடு. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள லேப்டாப், அசூஸ் ஜென்புக் UX303UB.

பார்ப்பதற்கு அழகாகவும் மெலிதாகவும் இருக்கும் இந்த லேப்டாப், 20 மி.மீ அகலமும் 1.45 கிலோ எடையும் கொண்டுள்ளது.

Smoky Brown மற்றும் Icicle Gold ஆகிய இரு வண்ணங்களில் வரும் லேப்டாப், மூன்று USM 3.0 போர்ட்களை கொண்டுள்ளது. தவிர, ஒரு எஸ்.டி. கார்டு ஸ்லாட், HDMI போர்ட், மினி டிஸ்ப்ளே போர்ட், 3.5 ஆடியோ சாக்கெட் ஆகியவை அடங்கும். மேலும், பேக்-லைட் கீபோர்ட் பயன்படுத்த வாடிக்கை யாளர்களுக்கு கச்சிதமாக அமையும்.

13 இன்ச் 1920*1080 ரெசல்யூஷன் டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த லேப்டாப், 1TB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மேலும், ஆறாவது ஜெனரேஷன் இன்டெல் கோர் i5-6200U 2.8GHz பிராசஸர் மட்டும் 8ஜிபி DDR3 ரேமைக் கொண்டு செயல்படுகிறது.

64 பிட் விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் இந்த லேப்டாப், Nvidia கரண்ட்-ஜென் கிராபிக்ஸ் கார்டைக் கொண்டுள்ளது.

சராசரியான தினசரி பயன்பாட்டுக்கு இரண்டு மணி நேரம் வரை தாங்கும் இந்த லேப்டாப்பின் பேட்டரிதான் இதன் மிகப் பெரிய குறை.

இந்த லேப்டாப்பின் இந்திய விலை ரூ.71,490

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்