கம்பெனி ஸ்கேன்: ஃபினோலெக்ஸ் கேபிள்ஸ் லிமிடெட்

(NSE SYMBOL: FINCABLES)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான நிறுவனமான ஃபினோலெக்ஸ் கேபிள்ஸ் லிமிடெட் (NSE SYMBOL: FINCABLES) எனும் ஃபினோலெக்ஸ் குரூப்பைச் சார்ந்த  நிறுவனமாகும்.

1958-ம் ஆண்டு புனேயில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இன்றைக்கு இந்தியாவில் எலெக்ட்ரிக்கல் மற்றும் டெலிகம்யூனிகேஷன் கேபிள்கள் தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனமாக திகழ்கிறது. 

ஆரம்ப காலத்தில் ஆட்டோ மொபைல் துறைக்கான பிவிசி இன்சுலேஷனுடன் கூடிய ஒயர்களை தயாரிக்கும் நிறுவனமாக இருந்த இந்த நிறுவனம்  பின்னர் படிப்படியாக பிவிசி இன்சுலேட்டட் இண்டஸ்ட்ரீயல் கேபிள்கள், பிவிசி இன்சுலேட்டட் சிங்கிள்கோர் மற்றும் மல்டிகோர் கேபிள்கள், ராடெண்ட் ரிப்பெல்லண்ட் இண்டஸ்ட்ரீயல் கேபிள்கள், ஹைவோல்டேஜ் பவர் கேபிள்கள், 3கோர் ப்ளாட் கேபிள்கள்,  பவர் மற்றும் கன்ட்ரோல் கேபிள்கள், பாலியெத்திலீன் இஞ்சுலேட்டட் ஜெல்லி நிரப்பப்பட்ட கேபிள்கள், ஆட்டோ மற்றும் பேட்டரி கேபிள்கள், கோஆக்சியல் மற்றும் சிஏடிவி கேபிள்கள், கம்ப்யூட்டர் லான் கேபிள்கள், சுவிட்ச் போர்டு கேபிள்கள், ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் என பல்வேறு வகை கேபிள்களை தயாரிக்கும் ஒரு நிறுவனமாக உருவெடுத்து சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த வகை கேபிள்களை தயாரிக்க புனே, கோவா மற்றும் உத்ரகாண்ட்டில் தொழிற்சாலைகளை கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் வியாபார பிரிவுகள் என்று பார்த்தால், எலெக்ட்ரிக்கல் கேபிள்கள் மற்றும் கம்யூனிகேஷன் கேபிள்கள் என்ற இரண்டு பெரும் பிரிவுகளில் வியாபாரம் செய்துவருகிறது இந்த நிறுவனம். 

புதிய வியாபார பிரிவாக பல்புகள் மற்றும் எலெக்ட்ரிக்கல் சுவிட்சுகள் தயாரிப்பில் இறங்கியுள்ள இந்த நிறுவனம், வீடுகள், கடைகள், அலுவலகங்கள், ஹோட்டல்கள் போன்ற இடங்களில் உபயோகிக்கப்படும் எலெக்ட்ரிக்கல் சுவிட்சுகள் வகையராவில் பிரீமியம் மற்றும் கிளாசிக் சுவிட்சுகள், சாக்கெட்டுகள், ரெகுலேட்டர்கள் போன்ற பல தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறது.  விளக்குகள் வகையராவில் இதே வகையான உபயோகங்களுக்கான சிஎஃப்எல், ட்யூப்லைட் மற்றும் பிட்டிங்குகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

தொழில் எப்படி?

தற்சமயம் மிகப் பெரிய எலெக்ட்ரிக்கல் மற்றும் டெலிபோன் கேபிள் தயாரிப்பு நிறுவனமாகத் திகழும் இந்த நிறுவனம்  எதிர்காலத்தில் நல்லதொரு வியாபார வாய்ப்பினை எதிர்நோக்கி இருக்கிறது என்று சொல்லுமளவு சூழ்நிலைகள் இருக்கிறது.

நீண்டகால அடிப்படையில் இந்தியா போன்ற பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பிருக்கும் நாட்டில் கட்டுமானத்துறைக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கும் என்றே சொல்லலாம்.  கட்டுமானத் துறையின் வளர்ச்சி இந்த நிறுவனத்துக்கு வியாபார வாய்ப்புகளை அதிகரித்துத் தரும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்