பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

இண்டெக்ஸ் : கடந்த வார ஆரம்பத்தில் சந்தையின் வேகத்தை பார்த்தால் நிஃப்டி புள்ளிகள் 8000 தாண்டி விடும் போலிருந்தது. ஆனால், எவ்வளவு முயன்றும் எதிர்பார்த்த ஏற்றம் ஏற்படவில்லை.

இதற்கு காரணம் பங்குகளின் சபளை அதிகரித்ததுதான். இருப்பினும் பெரிய அளவில் விற்பது நடக்காததால், வெள்ளிக் கிழமை நிஃப்டி 7899.30 புள்ளிகளில் நிலை பெற்றது.

இந்த அளவு சந்தை ஏற்றம் கண்டதற்கு வங்கிப் பங்குகள் முக்கிய காரணம். பேங்க் நிஃப்டி நல்ல ஏற்றம் கண்டது. முதலில் பேங்க் நிஃப்டியில் சார்ட் கவரிங் நடந்தது. பிறகு புதிய முதலீடுகளும் ஏற்பட்டன. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி பங்குகளின் விலை ஏற்றம் பேங்க் நிஃப்டி இண்டெக்ஸ் நல்ல ஏற்றம் காண பெரிதும் உதவி இருக்கிறது. அது 17000 புள்ளிகளை நோக்கி சென்றது. அந்நிய நிதி நிறுவனங்கள் (எஃப்ஐஐ) புதிதாக முதலீட்டை செய்ய ஆரம்பித்திருப்பதும்  பேங்க் நிஃப்டி இண்டெக்ஸ் உயர காரணமாக இருந்தது. ஆப்ஷன்ஸ் பிரிவில் நிஃப்டி ஏற்றம் காண எஃப்ஐஐக்களின் முதலீடு உதவியது. கடந்த மாதம் உருவாக்கிய தங்களின் லாங்க்-களை எஃப்ஐஐக்கள் ஹெட்ஜ் செய்ததை பார்க்க முடிந்தது. அவர்கள் 7900 ஸ்ட்ரைக் விலையில் புட்களை வாங்கி இருக்கிறார்கள்.

எஃப்ஐஐக்கள் மீண்டும் முதலீடு செய்ய ஆரம்பித்திருப்பது இந்தியப்  பங்குச் சந்தைக்கு  பாசிட்டிவ் ஆக இருக்கிறது. சந்தை பற்றி நல்ல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பெரிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பு அளவுக்கு அல்லது அதனை விட சற்று நன்றாக வரவே சந்தை  சென்டிமென்ட் அடிப்படையில் ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது. வெள்ளிக் கிழமை ரிலையன்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்ததை விட சற்று நல்லதாகவே வந்தது. இது வரும் வாரங்களில் சந்தை சிறப்பாக செயல்பட உதவி செய்யும் என எதிர்பார்க்கலாம்.

பேங்க் நிஃப்டி வெள்ளிக் கிழமை 16703 புள்ளிகளில் நிலை பெற்றிருக்கிறது. வரும் வாரங்களில் இது இன்னும் அதிகரிக்கக் கூடும். வரும் வாரத்தில், நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் 8015 புள்ளிகளை நோக்கியும், பேங்க் நிஃப்டி 17000 புள்ளிகளை நோக்கியும் செல்லும் என எதிர்பார்க்கலாம். வாரத்தின் இடையில் இறக்கத்தில் பங்குகளை வாங்கி சேர்க்கலாம்.

மாருதி சுஸுகி (MARUTI )

தற்போதைய விலை ரூ. 3816.05

வாங்கவும்


ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி காரணமாக யென்னின் மதிப்பு குறைய வாய்ப்பிருப்பதால் மாருதி சுஸுகி பங்கின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.

இந்தப் பங்கு  சில காலமாக நிலைபெற்று, ரூ. 3750 என்கிற வலுவான ரெசிஸ்டன்ஸ் நிலைக்கு அருகில் வர்த்தகமாகி வந்தது. கடந்த வாரம் இந்த வலுவான ரெசிஸ்டன்ஸ் உடைக்கப்பட்டு வர்த்தகமாகி நிறைவடைந்தது என்பது கவனிக்கத்தக்கது.

எனவே அடுத்த வாரங்களில் மாருதி சுஸுகி பங்கு ரூ. 4,000 வரை விலை அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்பிருக்கிறது. தற்போதைய விலையில் இந்தப் பங்கை நீண்ட கால முதலீடாக வாங்கலாம். ரூ. 3,730க்கு கீழ் ஸ்டாப் லாஸ் வைத்துக் கொள்ளவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்